அண்மைய செய்திகள்

recent
-

மகிந்த சுகந்திர கட்சி அங்கத்தவர் என நிருபித்தால் எதிர் கட்சி தலைவர் ஆகலாம்-I.சாள்ஸ்MP

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் I.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களிடம் வினாவியபோது.....
2015 ஆண்டு தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியும் சுகந்திர கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தியதன் காரணமாக பாராளுமன்றத்தில் மூன்றாம் நிலை பெரும்பான்மை கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்கட்சி அந்தஸ்து கிடைக்கப்பெற்றது

ஆனாலும் தற்போது  இலங்கை அரசாங்கத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைகாரணமாக ஐக்கிய தேசிய கட்சியானது தனித்து ஆட்சி அமைத்துள்ளது எனவே இரண்டாவது பெரும்பான்மை உள்ள கட்சியாக சுகந்திர கட்சி காண்ப்பட்டாலும்   தற்போது சபாநாயகரினால் மகிந்த ராஜபக்ஸ எதிர் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் ஆனாலும் குறித்த முடிவு பற்றி கட்சி தலைவர்கள் கூட்டத்திலோ அல்லது எனைய கட்சியினரிடமோ ஆலோசிக்கவில்லை அது மட்டும் இன்றி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்தவராக உள்ளார்.

பாராளுமன்ற நியதியின் படி பாராளுமன்றத்தில் இதுவரை பதிவு செய்துள்ள 6 கட்சிகளை தவிர வேறு எந்த கட்சி அங்கத்தவர்களும் எதிர் கட்சி தலைவராக முடியாது எனவே மகிந்த முதலில் தான் எந்த கட்சி அங்கத்தவர் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

தற்போது சபாநாயகர் தலைமையில் எதிர் கட்சி தலைவர் தொடர்பான விடையங்களை ஆராய்வதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவே அக் குழுவின் அறிக்கை வருகின்ற 8 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது எனவே அவ் அறிக்கையின் படி சபாநாயகரின் முடிவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ சுகந்திர கட்சி என நிருபித்தால் அவர் எதிர் கட்சி தலைவராகலாம்  அவர் பொதுஜன பெரமுன கட்சி அங்கத்தவராக இருந்தால் அவர் எதிர் கட்சி தலைவராக முடியாது எனவும் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் சுட்டிகாட்டியுள்ளதாகவும் I.சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.


மகிந்த சுகந்திர கட்சி அங்கத்தவர் என நிருபித்தால் எதிர் கட்சி தலைவர் ஆகலாம்-I.சாள்ஸ்MP Reviewed by Author on January 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.