குளிரான ஹெச்.டி.21749பி புதிய கிரகம் கண்டுபிடிப்பு.....
கடந்து ஆண்டு ஏப்ரல் மாதம் நாசா விண்வெளி ஆய்வு மையமானது, டெஸ் என்ற செயற்கைக்கோளை சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள்களை கண்டறிய அனுப்பியது.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமான நட்சத்திரங்களில் பூமியைப் போன்ற கிரகங்கள் உள்ளனவா என்பதை ஆராய அனுப்பப்பட்ட இந்த செயற்கைக்கோள், கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி தன்னுடைய ஆய்வை தொடங்கியது.
இந்நிலையில், சூரிய குடும்பத்திற்கு வெளியே புதிய கிரகம் ஒன்றை இந்த செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது. இது டெஸ் கண்டுபிடித்த 3வது கிரகம் ஆகும். இந்த கிரகம் மற்ற 2 கிரகங்களை ஒப்பிடும்போது, 36 நாட்களில் நிதானமாக நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

இந்த கிரகத்திற்கு ஹெச்.டி.21749பி என நாசா பெயரிட்டுள்ளது. இதன் மேற்பரப்பு சுமார் 300 டிகிரி பாரன்ஹீட் வரை குளிர்ந்த தன்மையில் இருப்பதும், நட்சத்திரத்திற்கு அருகாமையில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது பூமியைப் போல மூன்று மடங்கு பெரியது. ஆனால் சூரியனைப் போல பிரகாசமான நட்சத்திரப்பகுதியில் உள்ள மிகச் சிறிய கோள் இது என அமெரிக்க எம்.ஐ.டியின் டையானா ட்ராகோமிர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இந்த கிரகம் குறித்து கூறுகையில், ‘கிரகங்களின் வளிமண்டலங்கள் குறித்து நமக்கு நன்றாக தெரியும். ஆனால், சிறிய அளவிலான கிரகங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
ஏனென்றால் நட்சத்திரங்களிலிருந்து தொலைவில் இருக்கும் வளிமண்டலப் பாதைகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பதால் இந்த சிறிய, குளிரான கிரகங்களைப் பற்றி நம்மால் அதிகம் அறிய முடியவில்லை.
ஆனால், தற்போது அதிர்ஷ்டவசமாக ஒரு சிறிய மற்றும் குளிரான கிரகம் கிடைத்துள்ளது’ என தெரிவித்துள்ளார். டெஸ் செயற்கைக்கோள், சுமார் 53 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிறு நட்சத்திரங்களை கடந்து டெஸ் செயற்கைக்கோள் கண்டுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குளிரான ஹெச்.டி.21749பி புதிய கிரகம் கண்டுபிடிப்பு.....
Reviewed by Author
on
January 09, 2019
Rating:
Reviewed by Author
on
January 09, 2019
Rating:


No comments:
Post a Comment