மலம் கழிக்கும் போது மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவதற்கான காரணம் என்ன....
வாழ்நாளில் ஒரு தடவை சரி இந்த பிரச்சினையால் நாம் அவதியுறுவதுண்டு. உண்மையில் இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதில் சிலவற்றை பார்ப்போம்.
- உடலின் உட்பகுதியில் அதுவும் மலக்குடல் அல்லது மலப்புழையின் பாதையில் ஏதேனும் தொற்றுகள், காயங்கள் மற்றும் இரத்தக்கசிவுகள் இருந்தாலும், மலம் கழிக்கும் போது எரிச்சலை சந்திக்கக்கூடும்.
- காரமான உணவுகளை உட்கொண்டு வந்தால், அதன் காரணமாக மலம் கழிக்கும் போது மலப்புழையில் எரிச்சல் ஏற்படக்கூடும்.
- மலப்புழையில் சிறு பிளவுகள் ஏற்பட்டாலும் எரிச்சலை உணரக்கூடும். அதுவும் மிகவும் இறுகிய மலத்தை வெளியேற்றும் போது சென்சிவ்வான சருமத்தைக் கொண்ட மலப்புழையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, அதனால் எரிச்சலை சந்திக்க நேரிடும். இன்னும் சில நேரங்களில், இரத்தக்கசிவுடன் கூடிய மலம் வெளியேறவும் வாய்ப்புள்ளது.
- ஹெர்பீஸ் தொற்றுகள் மலப்புழையின் அருகில் உள்ள சருமத்தில் வெடிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
- நோய்த்தொற்றுகள், மோசமான சுகாதாரம் மற்றும் அவ்விடத்தில் ஏற்படும் தொடர்ச்சியான அரிப்புக்களால், மலம் கழிக்கும் போது எரிச்சலுடன் மிகுந்த வலியையும் அனுபவிக்க நேரிடுகிறது.
- குதத்துக்குரிய நரம்புகள் வீங்கி இருந்தாலோ அல்லது அவ்விடத்தில் சதை வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலோ, மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
- மலச்சிக்கல் மற்றும் இதன் தீவிர நிலையான பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அதன் காரணமாகவும் மலம் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலியை சந்திக்க நேரிடும்.
- புரோக்டால்ஜியா ஃபுகாக்ஸ் (Proctalgia Fugax) என்னும் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், எரிச்சல் மற்றும் வலியை உணரக்கூடும்.
மலம் கழிக்கும் போது மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவதற்கான காரணம் என்ன....
Reviewed by Author
on
January 08, 2019
Rating:

No comments:
Post a Comment