இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரை ஒதுங்கிய படகு மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது-இரு மீனவர்கள் மாயம்-
தமிழகம் இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்பகுதியில் DFRP –A-2196 MNR என்ற இலக்கத்துடைய கரை ஒதுங்கியுள்ள படகானது இலங்கை மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது என்று வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
இந்த படகு நேற்று புதன் கிழமை மாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாகவும், மீனவர்கள் இருவர் இதில் பயணித்ததாகவும், இந்த படகிலிருந்த இருவர் இன்னும் கரை திரும்பவில்லை எனவும் அறியமுடிகின்றது.
குறிப்பாக இந்த படகு மீன்பிடிக்க சென்ற படகு ஆகும். தற்போது அந்த படகில் சென்ற இருவர் எந்த நிலையில் இருக்கின்றார் என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும்.
அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது எங்காவது கரை ஒதுங்கியுள்ளார்களா என்பது தொடர்பில் நாங்களும் ஆராய்ந்து வருகின்றோம்.
மேலும், முடிந்தவரை இந்திய தமிழக தரப்பிலும், மீனவர் தரப்பாலும், இவர்களை கண்டு உரிய குடும்பத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய - இலங்கை அரசாங்கங்களை கேட்டுக்கொண்டுள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
இந்த படகு நேற்று புதன் கிழமை மாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றதாகவும், மீனவர்கள் இருவர் இதில் பயணித்ததாகவும், இந்த படகிலிருந்த இருவர் இன்னும் கரை திரும்பவில்லை எனவும் அறியமுடிகின்றது.
குறிப்பாக இந்த படகு மீன்பிடிக்க சென்ற படகு ஆகும். தற்போது அந்த படகில் சென்ற இருவர் எந்த நிலையில் இருக்கின்றார் என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும்.
அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது எங்காவது கரை ஒதுங்கியுள்ளார்களா என்பது தொடர்பில் நாங்களும் ஆராய்ந்து வருகின்றோம்.
மேலும், முடிந்தவரை இந்திய தமிழக தரப்பிலும், மீனவர் தரப்பாலும், இவர்களை கண்டு உரிய குடும்பத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய - இலங்கை அரசாங்கங்களை கேட்டுக்கொண்டுள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரை ஒதுங்கிய படகு மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது-இரு மீனவர்கள் மாயம்-
Reviewed by Author
on
January 03, 2019
Rating:

No comments:
Post a Comment