பத்து ஆண்டுகளாய் தேடிக்கொண்டிருக்கின்றோம்: அனந்தி சசிதரன்
யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 22 குடும்பங்களிற்கு நிவாரண பொருட்களை இன்று முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் உதயநகர் பகுதியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவரின் உறவினர் இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனந்தி சசிதரன் புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட நிதிப் பங்களிப்பில் குறித்த நிவாரண பொருட்களை பகிர்ந்தளித்தார்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த அனந்தி சசிதரன்,
இன்று உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கின்றது. ஆனால் இலங்கை அரசினால் வயதானவர்களுக்கு வழங்கப்படும் அரச உதவி தொகையோ வெறும் 250 ரூபா. இந்த பணத்தில் ஒரு நேர உணவைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் அண்ணளவாக இலங்கை பெறுமதியில் 80 ஆயிரம் ரூபா வரை வழங்கப்படுகின்றது. இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த உழைக்கும் தருவாயில் உள்ளவர்களை தொலைத்துவிட்டு இன்றும் தேடிக்கொண்டிருக்கின்றோம். இன்றல்ல நேற்றல்ல பத்து ஆண்டுகள் தேடிக்கொண்டிருக்கின்றோம்.
காலத்தை நீடிப்பதற்காகவே அரசு முயற்சிக்கின்றது. வழங்கப்பட்ட கால அவகாசத்தில் ஓஎம்பி அலுவலகம் அமைத்து காணாமல் போன ஒரு நபரைக்கூட கண்டு பிடிக்க முடியாது போனது. இன்று மீண்டும் கால அவகாசத்திற்காக முயற்சிக்கின்றது என தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளாய் தேடிக்கொண்டிருக்கின்றோம்: அனந்தி சசிதரன்
Reviewed by Author
on
February 27, 2019
Rating:

No comments:
Post a Comment