அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கு மாகாணத்தில் 7000 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கை! -


கிழக்கு மாகாணத்தில் ஒரு வீடு 12இலட்சம் ரூபா பெறுமதியில் 28,000 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இதன் முதல்கட்டமாக 7000 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்டப்பிரைஸ் சிறிலங்கா திட்டமூலம் இலகு கடன்களை நிதியமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள நிலையிலும் அந்த திட்டத்திற்கு சில வங்கிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை.

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் இன்று பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மண்முனைப்பற்று பிரசேசபை தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மண்முனைப்பற்று பிரதேசத்தில் கடந்த ஆண்டு சுமார் 67 மில்லியன் ரூபாவில் மேற்கொள்ளப்பட்ட 154 திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள கம்பிரலிய, கிராம சக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.


அத்துடன் மண்முனைப்பற்று பிரதேசத்தில் காணப்படும் சுகாதார, வீதி அபிவிருத்தி, வீடமைப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்கும் போது கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகளில் சில தளர்வினைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 7000 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கை! - Reviewed by Author on February 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.