தலைமன்னார் பகுதியில் 1400000 ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் கைது-படங்கள்
தலைமன்னார் புகையிரத வீதி பகுதியில் வைத்து ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளுடன் அப்பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 14 கிலோ 690 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் வழி காட்டலில் மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை கைது செய்ததோடு,அவரிடம் இருந்து குறித்த கஞ்சா போதைப்பொருள் மீடகப்பட்டுள்ளது.
-கைது செய்யப்பட்ட குறித்த குடும்பஸ்தர் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து சுமார் 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 14 கிலோ 690 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் வழி காட்டலில் மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை கைது செய்ததோடு,அவரிடம் இருந்து குறித்த கஞ்சா போதைப்பொருள் மீடகப்பட்டுள்ளது.
-கைது செய்யப்பட்ட குறித்த குடும்பஸ்தர் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளும் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தலைமன்னார் பகுதியில் 1400000 ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் குடும்பஸ்தர் கைது-படங்கள்
Reviewed by Author
on
February 01, 2019
Rating:
Reviewed by Author
on
February 01, 2019
Rating:

No comments:
Post a Comment