மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக இடம்பெற்ற நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்
மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் தலைமையில் நியூசிலாந்து தேசத்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினரின் இலவச மருத்துவ முகாம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(18) விடத்தல்தீவு புனித அடைக்கல மாதா தேவாலய வளாகத்தில் இடம் பெற்றது.
குறித்த மருத்துவ முகாமில் நீரிழிவு நோய் (Diabetes),தைராய்டு (Thyroid) தொடர்பான பிரச்சினைகள்.
பிட்யூட்டரி- (Pituitary) சுரப்பி தொடர்பான, கேபர்கோலின் (Cabergoline) சிகிச்சை தேவைப்படுபவர்கள்,ஆஸ்துமா (Asthma / COPD) (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்). (Breathing Problems) சுவாசப் பிரச்சினைகள்,இரத்த அழுத்தம் (Blood pressure).உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ நடவடிக்கைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் மருத்துவ பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனையில் தங்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவமனை பதிவு புத்தகத்தை (Clinic book) கொண்டு வர வைத்தியர்கள் கோரியுள்ளனர்.
மேலும் கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்கு கண்ணாடி கண் நோயாளருக்கு வழங்கப்படுகின்றது. குறித்த மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர்.இதன் போது அயல் கிராமங்களில் இருந்தும் பலர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொண்டனர்.
குறித்த மருத்துவ மருத்துவ முகாம் நாளை புதன்கிழமை (19) இலுப்பைக்கடவை.அந்தோனியார் புரம் புனித அந்தோனியார் தேவாலய வளாகத்திலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
August 19, 2026
Rating:

.jpeg)

.jpeg)


No comments:
Post a Comment