20,000 பேரை பலி கொண்ட சம்பவம்! சுனாமி-நிலநடுக்கம் இயற்கை பேரழிவு வரப்போகிறது! உயிர்பயத்தில் மக்கள்
ஜப்பானில் கடந்த சில தினங்களாகவே ஆழ்கடலில் இருக்கும் oar வகை மீன்கள் மீன்வர்களின் வலையில் சிக்கியுள்ளது.
இதனால் அங்கிருக்கும் சமூகவலைத்தளங்களில் சுனாமி அல்லது இயற்கை பேரழிவு ஏற்படப்போகிறது என்ற தகவல் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பானில் சில நாட்களாகவே oar வகை மீன்கள் தென்படுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை கூட Toyama பகுதியில் இருக்கும் மீனவரின் வலையில் இந்த மீன் சிக்கியுள்ளது. சுமார் 3.2 மீற்றர் நீளம் கொண்ட இந்த மீன்கள் கடலில் 3000 அடி உள்ளே தான் இருக்குமாம்.
அப்படி இந்த மீன்கள் வெளியில் தென்பட்டால் இயற்கை பேரழிவு ஏற்படும் என்ற பேச்சு இருக்கிறது. ஏனெனில் கடந்த 2011-ஆம் ஆண்டு 20 oar வகை மீன்கள் பிடிப்பட்டன, அதன் பின்னர் அங்கிருக்கும் Fukushima-வில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் 20000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இதே போன்று மீண்டும் இதே வகைகள் மீன்கள் தென்பட்ட போது, 2010-ஆம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
#うおすいレア生物 #またまた❗️ #リュウグウノツカイ 昨日、魚津市経田の海岸でリュウグウノツカイが打ち上げられているのが発見されました❗️全長は323cm。 富山湾では今年度5例目です。 あいにく今回発見されたものは 鳥につつかれ損傷が激しかったので、解剖などを行い研究用にしました。 前回獲れたリュウグウノツカイは 2/2(土)と2/3(日)の2日間限定で展示しますよ⤴⤴ 全長394.8cm。 今回はタッチOK🙆♂️ 深海魚ファンは見逃せませんよね〜🙌🙌 #幻の魚 #oarfish #deepsea #nature #beautiful #魚 #珍魚 #さかな #魚津水族館公式 #魚津水族館 #水族館 #富山 #uozuaquarium #aquarium #uozuaquariumofficial #限定 #レア #魚津 #経田 #背ビレ腹ビレ美しい #花魁
ஜப்பானில் மட்டுமின்றி, பிலிப்பைன்சிலும் இதே போன்று சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அங்கிருக்கும் Agusan பீச்சில் இந்த வகை மீன்கள் கிடந்துள்ளது, அதன் பின் நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ளது.
இதே போன்று ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜப்பானில் நிலநடுக்கம் மற்று சுனாமி பீதி இந்த மீனினால் கிளம்பியுள்ளதால், இது குறித்து ஆராய்ச்சியாளர்களிடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர்கள் இதற்கும், நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றிக்கும் 100 சதவீதம் சம்பந்தம் இல்லை, அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று மறுக்கின்றனர்.
ஆனால் இணையவாசிகள் பலரும் இல்லை, இது நடக்கும், ஆதாரங்கள் பல இருக்கின்றன, நிச்சயமாக கடலில் ஏதோ மாற்றம் நிலவியுள்ளது என்று கூறி வருகின்றனர்.




20,000 பேரை பலி கொண்ட சம்பவம்! சுனாமி-நிலநடுக்கம் இயற்கை பேரழிவு வரப்போகிறது! உயிர்பயத்தில் மக்கள்
Reviewed by Author
on
February 01, 2019
Rating:
No comments:
Post a Comment