2019 உலகக்கோப்பை தொடர்.. வெற்றி வாய்ப்பு இந்த அணிக்கு தான்
ஐசிசி உலகக்கோப்பை திருவிழா வரும் மே மாதம் நடக்கவுள்ளது.
இது குறித்து ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், பல வருடங்களாக இங்கிலாந்து அணி மிக சிறப்பான அணியை பெற்றுள்ளது.
அதே போல் தென் ஆப்ரிக்கா பல அர்பணிப்பான திறமையான வீரர்கள் பெற்ற அணியாக பல முறை உலகக் கோப்பை தொடரை சந்தித்துள்ளன. தற்போதும் மிக சிறந்த அணிகளாக உள்ளன. ஆனால் இவர்களால் இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை பெற முடியவில்லை.
எந்த அணியாக இருந்தாலும் விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினமான செயலாக இருக்கும்.
தற்போதுள்ள நிலையில் இந்திய அணியின் செயல்பாடு மிக சிறப்பானதாக உள்ளதால் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
2019 உலகக்கோப்பை தொடர்.. வெற்றி வாய்ப்பு இந்த அணிக்கு தான்
Reviewed by Author
on
February 02, 2019
Rating:

No comments:
Post a Comment