ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்...2வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா! இலங்கையின் நிலை என்ன?
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதன்படி அணிகள் தரவரிசையில் இந்திய அணி (122 புள்ளிகள்) 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
அவுஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை அடுத்தடுத்து வென்றதன் மூலம் இந்திய அணி ஒரு இடம் ஏற்றம் கண்டுள்ளது.
இங்கிலாந்து அணி (126 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி (111 புள்ளிகள்) 3-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி (111 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் (102 புள்ளிகள்), அவுஸ்திரேலியா (100 புள்ளிகள்), வங்கதேசம் (93 புள்ளிகள்), இலங்கை (78 புள்ளிகள்), வெஸ்ட்இண்டீஸ் (72 புள்ளிகள்), ஆப்கானிஸ்தான் (67 புள்ளிகள்), ஜிம்பாப்வே (52 புள்ளிகள்), அயர்லாந்து (39 புள்ளிகள்), ஸ்காட்லாந்து (33 புள்ளிகள்), ஐக்கிய அரபு அமீரகம் (15 புள்ளிகள்), நேபாளம் (15 புள்ளிகள்) அணிகள் முறையே 5 முதல் 15 இடங்களை பெற்றுள்ளன.
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்...2வது இடத்துக்கு முன்னேறிய இந்தியா! இலங்கையின் நிலை என்ன?
Reviewed by Author
on
February 05, 2019
Rating:

No comments:
Post a Comment