40 ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற சேவாக்:
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் திகதி அன்று, பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்னும் நபர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 துணை ராணுவப்படை வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதில் பலத்தகாயமடைந்த வீரர்கள் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான விரேந்தர் சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது.
ஆனால், என்னால் முடிந்ததை செய்வதற்காக குறைந்தபட்சமாக வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும் நான் பார்த்துக்கொள்கிறேன். அவர்களை என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறேன்' என கூறியுள்ளார்.
இந்த பதிவை பார்த்த இணையதளவாசிகள் பலரும், சேவாக்கிற்கு தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
40 ராணுவ வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற சேவாக்:
Reviewed by Author
on
February 17, 2019
Rating:

No comments:
Post a Comment