அமிதாப் பச்சனுக்கு இப்படி ஒரு நோயா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் அமிதாப் பச்சன் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர். அவரின் படங்கள் பற்றி இந்த தலைமுறை ரசிகர்களும் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் தனக்கு Hepatitis B நோய் இருப்பதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த விளம்பர தூதராக அமிதாப் பச்சனை உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) நியமித்துள்ளது. தனக்கும் அந்த நோய் இருப்பதாகவும், ஆனால் சாதாரண வாழ்க்கை வாழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் அமிதாப்.
இது பற்றிய நிகழ்வில் பேசிய அமிதாப், "Hepatitis B வைரஸ் தொற்று உள்ள பெண்களை ஒதுக்கி வைப்பது தவறு. திருமணமான பெண்கள் இந்த நோயால் அவர்கள் வீட்டை விட்டு வெளியில் அனுப்பப்பட்டுவிடுகிறார்கள் என அறிந்து அதிர்ச்சியடைந்தேன். என்னுடைய முகம் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படும் என்பதால் இது பற்றி பேசுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சனுக்கு இப்படி ஒரு நோயா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
Reviewed by Author
on
February 27, 2019
Rating:

No comments:
Post a Comment