தேசிய அளவில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதைப் பெற்ற தமிழக வீரர்!
சென்னையில் இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் சென்னையைச் சேர்ந்த இளம் வீரரான ராகுல் ரங்கசாமிக்கு, இந்த ஆண்டின் வளர்ந்து வரும் மோட்டார் வாகன விளையாட்டு வீரர் என்ற விருது வழங்கப்பட்டது.
இவர் LGB பார்முலா 4 பிரிவில் 2018ஆம் ஆண்டு நடந்த JK Tyre FMSCI தேசிய பந்தயத்திலும், FF 1600 பிரிவில் நடந்த MRF MMSC FMSCI இந்திய தேசிய பந்தயத்திலும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.

இதன் அடிப்படையில் வளர்ந்து வரும் மோட்டார் வாகன விளையாட்டு வீரர் விருதை பெற்றுள்ளார். மேலும், இந்த விழாவில் மோட்டார் வாகன பந்தய சங்க முன்னாள் தலைவரும், பிரபல கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனின் தந்தையுமான ஜி.ஆர்.கார்த்திகேயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
அத்துடன் வீராங்கனைகள் பிரிவில் மிரா எர்டா, ஸ்னேகா, ஷிரியா லோசியா ஆகியோரும், வீரர்கள் பிரிவில் கவுரவ்கில், அர்மான் இப்ராகீம், அமித் ரஜித் கோஷ், அஸ்வின் நாயக் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.

தேசிய அளவில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதைப் பெற்ற தமிழக வீரர்!
Reviewed by Author
on
February 27, 2019
Rating:
No comments:
Post a Comment