மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம்! -
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் எம்.டி.எம்.நிசாம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரினால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் மிக நீண்ட காலமாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.டி.எம்.நிசாம் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரினால் இடமாற்றப்பட்டம் செய்யப்பட்டிருந்தார்.
மேலும், கிழக்கு மாகாண மேலதிக சிரேஸ்ட்ட கல்விச் செயலாளராகவும் செயற்பட்டு வந்தார்.
பின்னர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வெற்றிடத்திற்கு மன்சூர் என்பவர் நியமிக்கப்பட்டு அவர் கடமையை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாமை புதிய கிழக்குமாகாண ஆளுனர் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மீண்டும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம்! -
Reviewed by Author
on
February 01, 2019
Rating:

No comments:
Post a Comment