வரலாறு காணாத அளவு வெப்பமான பூமி – ஐநாவின் அதிர்ச்சி தரும் தகவல் -
உலக வெப்பநிலைய1880 ஆண்டிலிருந்துதான் கணக்கிட துவங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டிற்குபிறகுதான் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்2016ஆம் ஆண்டு முதலிடத்திலும், 2017ஆம் ஆண்டு இரண்டாம் இடத்திலும், 2015ஆம் ஆண்டு மூன்றாம்இடத்திலும், 2018ஆம் ஆண்டு நான்காம் இடத்தையும் பெற்றுள்ளது.
இதற்கு காரணமாகபருவநிலை மாற்றம், பசுமையில்லா வாயுகள் அதிக அளவில் வெளியாகுதல், கடலில் வெப்பம் அதிகமாகுவதுமுக்கிய காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஐந்து ஆண்டுகளில் உலகின் வெப்பநிலைஒன்றரை டிகிரி செல்சியஸ்க்கு அதிகமாக இருக்கும் என்றும் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இதனால்காட்டு தீ, பனிபாறைகள் உருகுதல், கடல்மட்டம் அதிகரிப்பு போன்றவை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.தற்போது எப்போதும் இல்லாத அளவில் அண்டார்டிகாவில் பனிபாறைகள் உருகி வருவதாக ஆய்வுகள்தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவு வெப்பமான பூமி – ஐநாவின் அதிர்ச்சி தரும் தகவல் -
Reviewed by Author
on
February 08, 2019
Rating:

No comments:
Post a Comment