இலங்கை தமிழ் பெண்ணிற்கு பாப் பாடகர் மைக்கல் ஜாக்சனுடன் ஆடுவதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது
இலங்கையில் வாழ்ந்து வந்தவர் தமிழ் பெண் யமுனாசங்கரசிவம். இவர் தன்னுடைய 9 வயதில் இலங்கையிலிருந்து வெளியேறி அமெரிக்காவிற்கு குடியேறியுள்ளார்.
இவருடைய தாய் மலேசியாவைச் சேர்ந்தவர், தந்தை சிங்கப்பூரைச் சேர்ந்தவர் என்பதால் மூன்று வித மொழிகளையும் எளிதாக தெரிந்து கொண்டார்.
இதையடுத்து இவர் கடந்த 1991-ஆம் ஆண்டு பிரபல பாடகர் பாப் இசை மன்னன் மைக்கல் ஜாக்சனின் பாடலுக்கு அவருடன் சேர்ந்து பரதநாட்டியம் ஆடியிருப்பார்.
அந்த வீடியோ மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அவருக்கு அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் யமுனாசங்கரசிவம் மைக்கில் ஜாக்சனின் தீவிர ரசிகராம், ஆனால் இவர் அவரை எல்லாம் சந்திக்க முடியாது என்று நினைத்துள்ளார்.
அப்போது தான், மைக்கல் ஜாக்சனுடன் சேர்ந்து ஆடுவதற்கு பாரம்பரியம் மற்றும் நவீனமாக நடனம் ஆடுபவர்கள் தேவை எனவும், அதற்கான தேர்வும் நடந்து வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்த தேர்வுக்கு சுமார் 3000 பேர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது யமுனாசங்கரசிவம் தன்னுடைய திறமனையான நடனத்தை அங்கு வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னரே இவர் மைக்கல் ஜாக்சனுடன் நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. யமுனாசங்கரசிவம் அமெரிக்காவின் நியூயார் மாகாணத்தில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் Sociology & Anthropology-யில் ஆசிரியராக இருப்பதாக கூறப்படுகிறது.
இலங்கை தமிழ் பெண்ணிற்கு பாப் பாடகர் மைக்கல் ஜாக்சனுடன் ஆடுவதற்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது
Reviewed by Author
on
February 16, 2019
Rating:

No comments:
Post a Comment