மன்னார் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் தெரிவு
மன்னார் பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட ஐம்பத்தொரு இளைஞர் கழகங்களை ஒன்றிணைந்து மன்னார் பிரதேச இளைஞர் சமமேளனம் ஆரம்பிக்கும் நிகழ்வு 16-02-2019 காலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது
2019 ஆம் ஆண்டுக்கான இளைஞர் கழகங்களை தெரிவு செய்யும் பணிகள் தேசிய இளைஞர்சேவை மன்றத்தினால் இலங்கை முழுவதும் இடம் பெற்று வருகின்றது
அவ் தெரிவின் ஒரு பகுதியாக மன்னார் மாவட்டத்தின் அதிக இளைஞர் கழகங்களை கொண்ட மன்னார் பிரதேச பகுதியில் பதிவு செய்யப்பட்ட 51 இளைஞர் கழகங்களையும் உள்ளடக்கி பிரதேச சம்மேளன தெரிவானது
மன்னார் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி சைமன் சில்வா தலைமையில் இடம் பெற்றது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோகராஜ அவர்களும் மன்னார் மாவட்ட தேசிய சம்மேளன உறுப்பினர்களான ஜோசப் நயன் மற்றும் ஜசோதரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களும் மற்றும் கிராம ரீதியான இளைஞர் கழகங்களை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் இளைஞர் யுவதிகளும் கலந்து கொண்டனர்
குறித்த நிகழ்வில் 2019 ஆண்டுக்காண நிர்வாக தெரிவும் வருடத்திற்கான திட்டமிடல் நிகழ்வும் இடம் பெற்றதுடன் 2018 இடம் பெற்ற சிரம சக்தி வேலைத்திட்டதினை பூர்த்தி செய்த இளைஞர் கழகங்களுக்கான காசோலை மற்றும் போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
February 17, 2019
Rating:

No comments:
Post a Comment