அண்மைய செய்திகள்

recent
-

வெளியாகியது வருடம் முழுவதும் வாய் திறக்காத எம்.பிக்களின் பட்டியல்:


நாடாளுமன்றத்தில் கடந்த வருடம் வாயே திறக்காமல் 13 எம்.பிக்கள் இருந்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு, தமது கருத்துக்கள், தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகள் எதையும் இவர்கள் நாடாளுமன்றத்திற்குள் பேசியிருக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கணிப்பிடும் Manthri.lk இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவு, அவர்கள் விவாதங்களில் கலந்துகொள்வது உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில், Manthri.lk புள்ளிவிபரங்களை வெளியிடுவது வழக்கம். இப்பொழுது கடந்த வருட தகவல்களை வெளியிட்டுள்ளது

சரத் அமுனுகம, இந்திக பண்டார, தரநாத் பஸ்நாயக்க, லக்ஸ்மன் செனவிரத்ன, லக்ஸ்மன் வசந்த பெரேரா, அங்கஜன் இராமநாதன், லோஹன் ரத்வத்த, ஸ்ரீபால கம்லத், ஜனக பண்டார தென்னக்கோன், ஆறுமுகன் தொண்டான், தேனுக்க விதானகமகே, துலிப் விஜயசேகர ஆகியோரே நாடாளுமன்றத்திற்குள் கடந்த 2018 இல் ஒரு முறை கூட உரையாற்றாத, விவாதங்களில் பங்கேற்காத எம்.பிக்கள்.

கடந்த வருடத்தில் 77 நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்றிருந்தன. மேலே குறிப்பிட்ட எம்.பிக்கள் 30 நாளுக்கும் குறைவான வரவையே வைத்துள்ளனர். லக்ஸ்மன் வசந்த பெரேரா வெறும் 16 நாட்கள்தான் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளார்.
இதில் ஆறுமுகன் தொண்டான், அங்கஜன் இராமநாதன் ஆகிய இரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெளியாகியது வருடம் முழுவதும் வாய் திறக்காத எம்.பிக்களின் பட்டியல்: Reviewed by Author on February 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.