இலங்கையை முன்மாதிரியாக கொண்டு ஐநா விசாரணை? தி கார்டியன் தகவல் -
ரோஹிங்யா அகதிகள் குறித்த விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளின் தகவல்களை மேற்கோள்காட்டி, தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நிறைவடைந்தது. இதன்போது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு எவ்வாறு செயற்பட்டது என்பது தொடர்பில் நடத்தப்பட்ட பெற்றிக் விசாரணை அறிக்கை, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு முழுமையாக தோல்வி அடைந்திருந்தது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை அடுத்து குறித்த கட்டமைப்பு ரீதியான தோல்வியை ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுசெயலாளர் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டிருந்தார்.
அத்துடன், இனி அவ்வாறான தவறு இடம்பெறாம் பார்த்துக் கொள்ளப்படும் என்று கூறி இருந்தார்.
இந்நிலையிலேயே, ரோஹிங்யா அகதிகள் குறித்த விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை இலங்கையை முன்மாதிரியாகக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரோஹிங்யா அகதிகள் தொடர்பான விசாரணையின் போது, அவ்வாறான கட்டமைப்பு ரீதியான தோல்வி ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிந்து, பாடங்களைக் கற்றுக் கொள்ளும் நோக்கில், இலங்கையை முன்மாதிரியாக கொண்டு விசாரணைக்குழு செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை முன்மாதிரியாக கொண்டு ஐநா விசாரணை? தி கார்டியன் தகவல் -
Reviewed by Author
on
February 28, 2019
Rating:

No comments:
Post a Comment