மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் கலந்தாய்வு-
வரலாற்று சிறப்பு மிக்கதும் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றானதுமான
மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் அரசின் உத்தியோகபூர்வ
வர்த்தமானி பிரசுரத்துக்கு அமைவாக நடாத்தப்படும் வருடாந்த
மகாசிவராத்திரிப் பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் முதலாவது கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சீ.ஏ.மோகன்றாஸ் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் 04.03.2019 அன்று நடைபெறும் சிவராத்திரி விழாவுக்கு
வழமைபோன்று இவ்வாண்டும் சிவராத்திரி தினத்தில் ஆயிரக்கணக்கான அடியவர்கள் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என
எதிர்பார்க்கப்படுவதால் அவர்களுக்குரிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பாக இவ் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இவ்வாண்டும் சுமார் வழமைபோன்று ஐந்து இலட்சம் பத்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதால் குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம்,
பாதுகாப்பு மற்றும் உணவு விடயங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகள் விடயமாக ஆராயப்பட்டது.
ஆலயம் செல்லும் வீதி அபிவிருத்தி திணைக்களம், வீதி அதிகார சபை மற்றும்
மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான வீதிகளுக்கு அருகாமையில் பற்றைகள் வளர்ந்திருப்பதால் இவைகள் அவசியம் துப்பரவு செய்யப்பட வேண்டும் என இவ் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இவ் விழாக்காலங்களில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை இரு
பகுதியினருக்குமிடையே பிரச்சனைகள் தலைதூக்கி வருவதால் இரு பகுதினரும் எவ்வாறு போக்குவரத்து சேவைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் ஆலய வளாகத்தில் இவர்கள் எவ்விடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி பிரயாணிகளை ஏற்றி இறக்க வேண்டும் என்ற இடங்களை முன்கூட்டியே நேரடியாக காண்பித்து அறிவுரை வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இத்துடன் விழாக் காலங்களில் திருடர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டி
வருவதால் பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது அவசியம் எனவும்
தெரிவிக்கப்பட்டது.
இம்முறை ஆலய வளாகத்துக்குள் எக்காரணம் கொண்டும் பொலீத்தீன் பாவனைகள் நடைபெறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் இவ் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்து
கொண்டதுடன் திருக்கேதீஸ்வரம் ஆலயம் சார்பாக இவ் ஆலய பரிபாலன சபை செயலாளர் ஓய்வு நிலை எந்திரி எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் கலந்தாய்வு-
Reviewed by Author
on
February 09, 2019
Rating:

No comments:
Post a Comment