டிரம்ப் ரத்தக் கறைகளுடன் வெளிவருவார்..! கடும் எச்சரிக்கை விடுத்த வெனிசுலா ஜனாதிபதி -
வெனிசுலா நாட்டில் ஜனாதிபதி நிகோலஸ் மடுரோவின் ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக அமெரிக்காவின் ஆதரவுடன், எதிர்க்கட்சி தலைவர் கைடோ தன்னை இடைக்கால ஜனாதிபதியாக கடந்த மாதம் அறிவித்துக் கொண்டார்.
ஆனால், நிகோலஸ் மடுரோ இதனை ஏற்கவில்லை. அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கண்டித்து மடுரோ கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு மடுரோ பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறுகையில், ‘எங்களது உள்விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம். நிறுத்துங்கள் டிரம்ப். எங்கள் நாட்டு விடயங்களில் தலையிட நினைத்தால், வெள்ளை மாளிகையில் இருந்து ரத்தக் கறைகளுடன் வெளிவருவீர்கள். வெனிசுலாவை வியட்நாமாக மாற்ற எண்ணாதீர்கள்’ என எச்சரித்துள்ளார்.
அத்துடன் வெனிசுலாவில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஐரோப்பிய நாடுகளின் ஆலோசனையை மடுரோ நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் ரத்தக் கறைகளுடன் வெளிவருவார்..! கடும் எச்சரிக்கை விடுத்த வெனிசுலா ஜனாதிபதி -
Reviewed by Author
on
February 05, 2019
Rating:
No comments:
Post a Comment