மாதவிலக்கு புனிதமானது: சபரிமலை விவகாரத்தில் நடிகர் விஜய்சேதுபதி கருத்து -
சபரிமலையில் அனைத்துப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது
கடந்த 2-ம் திகதி கோழிக்கோட்டை சேர்ந்த பிந்து, மலப்புரத்தை சேர்ந்த கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலைக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், கேரளாவில் தான் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய்சேதுபதி சபரிமலை விவகாரம் தொடர்பாக சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ஒரு ஆணாக வாழ்க்கை நடத்துவது மிகச் சுலபம். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கினால் பெண்கள் வலி அனுபவிக்க வேண்டும். மாதவிலக்கு தூய்மையானதல்ல என்று யார் சொன்னது? உண்மையில் அது மிகவும் புனிதமானது. சபரிமலை பிரச்சினையில் நான் கேரள முதல்வர் பினராயி விஜயன் பக்கம் நிற்கிறேன் என கூறியுள்ளார்.

மாதவிலக்கு புனிதமானது: சபரிமலை விவகாரத்தில் நடிகர் விஜய்சேதுபதி கருத்து -
Reviewed by Author
on
February 05, 2019
Rating:
No comments:
Post a Comment