அளவெட்டியில் விவசாயத்தில் சாதிக்கும் தமிழன்!
ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றிய தலைவரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இரமாநாதன் சேனாதிராஜா பிறேமகுமாரின் விளை நிலப்பகுதிக்கு 9/3/2019 விஜயம் செய்திருந்ததோடு, யாழ் மாவட்டத்தில் முதலாவதாகவும் வெற்றிகரமாகவும் செய்கை பண்ணப்பட்ட இஞ்சி அறுவடையையும் வைபவ ரீதியாக அறுவடை செய்து வைத்துள்ளார்.
மூன்றாவது தலைமுறையாகவும் விவசாயத்தை மேற்கொண்டுவருவதோடு 9 ஏக்கரில் மேட்டு செய்கையும், 2 ஏக்கரில் வயல் செய்கையினையும் மேற்கொண்டு வருகிறார்கள். பல்வேறு விவசாய விருதுகளுக்கும் சொந்தக்காறராகவும் பிறேமகுமார் விளங்குகிறார்.
TOM EJC இன மாமர விளை நிலப்பரப்பில், ஊடு பயிர் செய்கையாக இஞ்சி செய்கையை மேற்கொண்டுள்ளார். 15KG விதை இஞ்சியை நடுகை செய்து ,1200KG விளைதிறனாக
அறுவடையும் செய்துள்ளார். உற்பத்தி செலவாக 90000 ஆயிரம் ரூபாவினை செலவு செய்துள்ளார். 1KG- 350 ரூபா வீதம்,விற்பனைக்கான சந்தை வாய்ப்பாகவும் பெறுகிறார்.
இரண்டு நிரந்தர பணியாளர்கள் மூலமும், தமது குடும்பத்தின் கடின உழைப்பின் மூலமும் விவசாய செய்கையின் பெருமகனாக திகழ்வது அனைவருக்கும் எடுத்துக்காட்டான விடயம். மேலதிக தேவைகளின் போது விவசாய பணியாளர்களையும் பெற்று கொள்வார்.
தனியார் நிறுவனம் ஒன்று தமது உற்பத்தி பொருட்களை வேண்டியளவு கொள்வனவு செய்து வருவதனாலும், அவர்களின் தேவைக்கேற்பவும் உற்பத்திகளை தாம் மேற்கொள்வதாகவும், விவசாய போதனாசிரியர்களின் ஆலோசனையும், தமது பரம்பரையான அனுபவங்களை கொண்டும் விவசாயத்தை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி விருது பெற்ற சேனாதிராஜா பிறேமகுமார் சிறந்த முயற்சியாளராகவும் விற்பனையாளராகவும் திகழ்வதோடு தென்னிலங்கை காலபோகத்தையும் கருத்தில் கொண்டு உற்பத்திகளை பெருமளவில் மேற்கொள்கிறார். சுண்டங்கத்தரி, கெக்கரி, கோவகருக்கு பிசுக்கு ஆகியவற்றின் மூலம் சிறந்த ஆதாயத்தையும் பெறுகிறார்.தூவல் நீர்ப்பாசன முறைமை மூலம் செய்கைகளை உண்டு பண்ணுகிறார்.
அங்கஜன் இராமநாதன் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரிடம், பிறேமகுமாரின் தகப்பனார் சேனாதிராஜா, படித்தவர்கள் விவசாயத்தை செய்ய முன்வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அவற்றோடு புதிய உற்பத்திகளை அறிமுகம் செய்தால் செய்கை பண்ணுவதற்கு தயாராக இருப்பதாகவும் பிறேமகுமார் நம்பிக்கையோடும் பெருமிதத்தோடும் தெரிவித்துள்ளார்.
அளவெட்டியில் விவசாயத்தில் சாதிக்கும் தமிழன்!
Reviewed by Author
on
March 10, 2019
Rating:

No comments:
Post a Comment