பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்-கொலையாளிக்கு சிறைத்தண்டனை -
பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை குற்றவாளிக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த ரிஸான் உதயகுமார் என்ற 18 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
17 வயதான இளைஞனால் இந்த கொலை செய்யப்பட்டுள்ளது. எனினும் சட்டரீதியான காரணங்களுக்காக கொலை சம்பவத்தை மேற்கொண்டவரின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
Watford பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் குறித்த தமிழ் இளைஞன் வீட்டின் வாகனம் நிறுத்துமிடத்தில் மறைந்திருந்தார். இதன்போதே குற்றவாளியான 17 வயது இளைஞன் உதயகுமாரின் இதயத்தில் 3 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இது தொடர்பில் பிரித்தானியா நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இதன்போது 17 வயதான இளைஞன் குற்றவாளி என அறிவித்த நீதிபதி, 7 வருட சிறைத்தண்னை விதித்து தீர்ப்பளித்தார்.
எனினும் தங்கள் அப்பாவி மகன் கொலை தொடர்பில் போதுமான நீதி கிடைக்கவில்லை என உதயகுமாரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கத்திக் குத்து குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு நல்ல பாடத்தை கற்பிக்கும் வகையில் தீர்ப்பு காணப்பட வேண்டும் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
Watford பகுதியை சேர்ந்த இளம் பெண்ணுடன் உதயகுமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு உதயகுமார் சென்றுள்ளார்.
திடீரென வீட்டிற்கு வந்த குறித்த பெண்ணின் தம்பி, உதயகுமாரை தேடியுள்ளார். உடனடியாக அந்த பெண் உதயகுமாரை வாகனம் நிறுத்துமிடத்தில் மறைத்து வைத்துள்ளார்.
அங்கு சென்ற பெண்ணின் தம்பி, உதயகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கடும் ஒழுக்கங்களை கடைபிடிக்கும் அந்த பெண்ணின் வீட்டில் இப்படி ஒரு இளைஞன் நுழைந்தமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக கொலையாளியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் கொலை ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில் கொலையாளிக்கு 7 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன்-கொலையாளிக்கு சிறைத்தண்டனை -
Reviewed by Author
on
March 10, 2019
Rating:

No comments:
Post a Comment