பாகிஷ்தான் பிடியில் இருந்து விடுதலையாகும் அபிநந்தன்! ஈழத்தமிழர் வரலாற்றில் வெடிக்கும் புதிய சர்ச்சை -
இந்திய விமானி அபிநந்தன் பாகிஷ்தான் அரசின் இராணுவத்தினரிடம் சிக்கிக்கொண்ட நிலையில், அந்த ஒரே ஒரு வீரருக்காக உலக வல்லரசு நாடுகள் அனைத்தும் பாகிஷ்தானுக்கு பல அழுத்தங்களை பிறப்பித்தன.
விமானி அபிநந்தன் பிடிபட்டு சரியாக 24 மணித்தியாலத்திற்குள் பாகிஷ்தான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது அவரை நாளை விடுதலை செய்யப்போகின்றோம் என்று.
உண்மையில் ஈழத்தமிழர் விடயத்தில் இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது ஒரு நாடு வாய்திறக்கவில்லை, இலங்கைக்கு ஒரு நீதியாகவும், அது ஒரு சிறிய நாடு எனவும் இந்தியா வல்லரசு என்பதால் அதற்கு ஒரு நீதி எனவும் சர்வதேச நாடுகள் பார்க்கின்றன என இலங்கையின் மூத்த சட்டவாளரும் சிரேஷ்ட அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின்போது, வடக்கில் 40 ஆயிரம் மக்கள் துடிக்க துடிக்க கொல்லப்பட்டார்கள் அப்போது சர்வதேச நாடுகளின் மனிதாபிமானம் எங்கே போனது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஷ்தான் பிடியில் இருந்து விடுதலையாகும் அபிநந்தன்! ஈழத்தமிழர் வரலாற்றில் வெடிக்கும் புதிய சர்ச்சை -
Reviewed by Author
on
March 02, 2019
Rating:

No comments:
Post a Comment