ஆறு தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து மனித உரிமைகள் பேரவையில் மனு கையளிப்பு! -
ஆறு தமிழ் கட்சிகளினால் கைச்சாத்திடப்பட்ட மனு ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று விடயங்கள் உள்ளடங்கிய மனுவே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படவேண்டும், சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று நியமிக்கப்படவேண்டும், 30-1 மற்றும் 34-1 ஆகிய தீர்மானங்கள் அமுல்ப்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐ.நா. ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நியமிக்கப்படுபவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவேண்டும் என்று இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆறு தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து மனித உரிமைகள் பேரவையில் மனு கையளிப்பு! -
Reviewed by Author
on
March 20, 2019
Rating:
Reviewed by Author
on
March 20, 2019
Rating:


No comments:
Post a Comment