பிரதான பதையில் உள்ள வடிகால் சேதம் கண்டுகொள்ளாத நிர்வாகம்-படங்கள்
பராமரிப்பு இன்றி உடைந்த நிலையில் காணப்படுவதனால் பொது மக்கள் மற்றும் வாகன
சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
மன்னார் மத்திய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அரச பேருந்து சேவை நிலையத்தின் நுழைவு பகுதியில் உள்ள கால்வாயே மேற்படி சேதமாகி காணப்படுகின்றது.
பிரதான பாதைகளை ஒன்றினைத்து அதன் ஓரத்தில் தொடுக்கப்பட்டுள்ள குறித்த கால்வாயின் மேல் பகுதியி உள்ள மூடியானது பாதி உடந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து அவ் மூடிக்கு பொருந்தாத முறையில் சாதரணமாக அவ் வாய்காலானது தற்காலிகமாக பல நாட்களாக மூடப்பட்டு காணப்படுகிறது.
அதே நேரத்தில் குறித்த கால்வாய் மூடிகலே பாத சாரிகள் கடவையாகவும் காணப்படுகின்ற நிலையில் உரிய தரப்பினர் இதுவரை குறித்த கால்வாயினை சீரமைக்கவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது .
அதே நேரத்தில் அவ் கால்வாயினூடகவே அரச பேருந்துகள் பயணிக்கின்றன அதே போன்று அவ் உடைந்த கால்வாய் அருகிலே ஆட்டோ சாரதிகளுக்கான தரிப்பிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த வடிகானை உரியமுறையில் அமைத்து தருமாரு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பிரதான பதையில் உள்ள வடிகால் சேதம் கண்டுகொள்ளாத நிர்வாகம்-படங்கள்
Reviewed by Author
on
March 10, 2019
Rating:

No comments:
Post a Comment