மன்னார் புதைகுழி கார்பன் பரிசோதனை சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது- காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள்-
மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பிலான சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை அது குறித்து இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது என காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.
-இவ்விடையம் தொடர்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் இன்று (8) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை பொறுமை காக்க வேண்டியுள்ளது.கார்பன் கால நிர்ணய அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் ரி. சரவணராஜாவிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சுமார் 350 வருடங்கள் தொடக்கம் 600 வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்தவர்களுடையவை என கார்பன் கால நிர்ணய அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
நவீன தொழில் நுட்பத்திற்கான உள்ளீடுகள், விஞ்ஞான ரீதியான கண்டு பிடிப்புகளும், மானுட தடயவியலுடன் தொடர்புடைய விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.புதைகுழியில் கண்டு பிடிக்கப்பட்ட வேறு சான்றுகள் மற்றும் தடயப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முழுமையான ஆய்வறிக்கையின் பின்னரே இறுதித் தீர்மானத்திற்கு வர முடியும்.
ஏனைய ஆய்வுகளின் அறிக்கை மற்றும் மனிதப் புதைகுழியில் பணியாற்றும் நிபுணர்களின் கருத்துகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-இவ்விடையம் தொடர்பாக காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் இன்று (8) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை பொறுமை காக்க வேண்டியுள்ளது.கார்பன் கால நிர்ணய அறிக்கையின் மூலப்பிரதி மன்னார் நீதவான் ரி. சரவணராஜாவிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மன்னார் மனித புதை குழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் சுமார் 350 வருடங்கள் தொடக்கம் 600 வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்தவர்களுடையவை என கார்பன் கால நிர்ணய அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
நவீன தொழில் நுட்பத்திற்கான உள்ளீடுகள், விஞ்ஞான ரீதியான கண்டு பிடிப்புகளும், மானுட தடயவியலுடன் தொடர்புடைய விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.புதைகுழியில் கண்டு பிடிக்கப்பட்ட வேறு சான்றுகள் மற்றும் தடயப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் முழுமையான ஆய்வறிக்கையின் பின்னரே இறுதித் தீர்மானத்திற்கு வர முடியும்.
ஏனைய ஆய்வுகளின் அறிக்கை மற்றும் மனிதப் புதைகுழியில் பணியாற்றும் நிபுணர்களின் கருத்துகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் புதைகுழி கார்பன் பரிசோதனை சகல அறிக்கைகளும் வெளியாகும் வரை இறுதித் தீர்மானத்திற்கு வர முடியாது- காணாமற்போனோரின் உறவினர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள்-
Reviewed by Author
on
March 10, 2019
Rating:
Reviewed by Author
on
March 10, 2019
Rating:

No comments:
Post a Comment