ஈழத்தமிழர்கள் குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு! -
மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதிகிடைப்பதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.
அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இதனை அறிவித்துள்ளது. பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கன்செர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்ஃபோன் கருத்து வெளியிடுகையில், “தமிழ் மக்களுக்கு நீதிகிடைப்பதற்கு தாம் தொடர்ந்தும் போராடுவோம்.
இந்த விடயம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பலமாக ஒலிக்கின்றது. இந்நிலையில், யுத்தக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதேவேளை, இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் இல்லை என்று, தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி குழுவின் தலைவர் போல் ஸ்கல்லி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர்கள் குறித்து பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு! -
Reviewed by Author
on
March 19, 2019
Rating:

No comments:
Post a Comment