பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கும் அமெரிக்க நிறுவனம் -
கல்ஃபோர்னியாவைச் சேர்ந்த ஜெட்பேக் ஏவியேஷன் நிறுவனம் சயின்ஸ் ஃபிக் ஷன் படங்களில் புனைந்துரைக்கப்படும் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை நிஜ வாழ்க்கையில் சாத்தியமாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
விமானத் தொழில் நுட்ப அடிப்படையில் ஜெட் எஞ்சின்களைக் கொண்டு பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திலும் 15 ஆயிரம் அடி உயரத்திலும் செல்லும் திறனுடையவையாக பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் இருக்கும் என்றும் அவற்றின் விலை குறைந்தபட்சம் 3 லட்சத்து 80 ஆயிரம் டாலராக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கும் அமெரிக்க நிறுவனம் -
Reviewed by Author
on
March 16, 2019
Rating:

No comments:
Post a Comment