உள் உறுப்பு, வெளி உறுப்புகளில் ஏற்பட கூடிய வலிகளை போக்க வேண்டுமா...
நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றே இந்த இஞ்சி எண்ணெய்யும் மருத்துவ குணம் கொண்டது.
எப்படி மரத்திலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறதோ அதே போன்று இஞ்சியில் இருந்தும் எண்ணெய் எடுக்கப்படுகிறது.
இந்த எண்ணெய் மங்கிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஆனால் ஊட்டச்சத்துக்கள் இதில் அதிகம்.
உள் உறுப்பில் ஏற்பட கூடிய பாதிப்புகள் மற்றும் வெளி உறுப்பில் ஏற்பட கூடிய வலிகள் முதலிய அனைத்திற்கும் இது தீர்வாக இருக்கும்.
குறிப்பாக இது ஆண்மை குறைபாடு, மூட்டு வலி, செரிமான கோளாறு போன்றவற்றிற்கு எளிதில் தீர்வினை தருகின்றது.
தற்போது இஞ்சி எண்ணெயின் பயன்களை பற்றி இங்கு பார்ப்போம்.

- வெது வெதுப்பான நீரில் சிறு துளி இஞ்சி எண்ணெய்யை கலந்து குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் பறந்து விடும். மேலும், வயிற்றில் உள்ள அழுக்குகளும் வெளியேறி விடும்.
- ஒரு பாத்திரத்தில் சுடு நீரை எடுத்து கொண்டு அதில் சிறிது இஞ்சி எண்ணெய்யை சேர்த்து ஆவி பிடித்தால் சுவாச கோளாறுகள் பறந்து போய் விடும்.
- கல்லீரலில் உள்ள அழுக்குகள் வெளியேறவும், சீராக வேலை செய்யவும், கொழுப்புகளை நீக்கவும் இஞ்சி எண்ணெய் வழி செய்கிறது. அத்துடன் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.
- இஞ்சியில் இயற்கையாகவே புற்றுநோயை அபாயத்தை தடுக்கும் ஆற்றல் உள்ளது. அதே போன்று தான் இஞ்சி எண்ணெய்யிலும் இந்த வகையான தாக்கம் அதிக அளவிலே உள்ளது கணைய புற்றுநோய், குடல் வகை புற்றுநோய், தோல் புற்றுநோய் முதலியவற்றில் இருந்து உங்களை பாதுகாக்கும் தன்மை இந்த எண்ணெய்யிற்கு உள்ளது.
- சீனர்கள் ஆரோக்கியமான இதயத்தை பெறுவதற்கு இஞ்சி எண்ணெய்யை தான் பயன்படுத்துவார்களாம். இந்த எண்ணெய் கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்ளும். மேலும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமலும் பார்த்து கொள்ளும்.
- ஆண்மை குறைபாடால் அவதிப்படும் ஆண்களுக்கு உங்களின் பிறப்புறுப்பில் இஞ்சி எண்ணெய்யை கொண்டு மசாஜ் கொடுத்து வந்தாலே இதற்கான தீர்வை எளிதில் பெற்று விடலாம்.
- இஞ்சி எண்ணெய்யை தடவி வந்தால் உடலில் ஏற்படும் மூட்டு பிரச்சினை, மூட்டு தேய்மானம், மூட்டு வலிகள் ஆகியவற்றையும் குணப்படுத்தி விடலாம்.
உள் உறுப்பு, வெளி உறுப்புகளில் ஏற்பட கூடிய வலிகளை போக்க வேண்டுமா...
Reviewed by Author
on
March 02, 2019
Rating:
No comments:
Post a Comment