745,000 யூரோக்கள் கரன்சியை கண்டு பிடித்த ஜேர்மன் மோப்ப நாய் -
மேற்கு ஜேர்மனியின் Düsseldorf விமான நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த Luke என்னும் அந்த மோப்ப நாய் 745,000 யூரோக்கள் கரன்சியை கண்டு பிடித்துள்ளதாக சுங்கத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 வயதாக இருக்கும்போது பணிக்கமர்த்தப்பட்ட Luke, கரன்சியை எப்படி மோப்பம் பிடிப்பது என்பதை கற்றுக் கொள்ளும் மிக நீண்ட பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பயிற்சியை முடித்த Luke, பிப்ரவரிக்குள் 12 முறை பணத்தைக் கண்டு பிடித்துள்ளது.

பணம் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் Luke மிகவும் உதவிகரமாக இருப்பதாக தெரிவித்த சுங்கத்துறை செய்தி தொடர்பாளர் Michael Walk, இப்போதே Luke இவ்வளவு சாதித்துள்ளதைப் பார்த்தால், எதிர்காலத்தில் அது என்னவெல்லாம் செய்யப்போகிறதோ என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார்.
10,000 யூரோக்கள் அல்லது அதற்கு அதிகம் பணத்தை ஜேர்மனிக்குள் கொண்டு வருவதற்கு ஜேர்மன் சட்டம் அனுமதிப்பதில்லை.
அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் பயணிகள் தாங்கள் கொண்டு வரும் பணம் குறித்து ஒரு எழுத்துப்பூர்வ அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். சில நேரங்களில் Luke 10,000 யூரோக்களுக்கு குறைவான பணத்தைக் கூட கண்டு பிடித்திருக்கிறது.

அது மட்டுமின்றி யூரோக்கள், டொலர்கள் மற்றும் பவுண்டுகளைக் கூட கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தது Luke.
Luke மற்றும் பிற மோப்ப நாய்கள், சட்ட விரோதமாக போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு பணம் கடத்தப்படுவதை தடுப்பதில் ஜேர்மன் அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியாக உள்ளன எனலாம்.
745,000 யூரோக்கள் கரன்சியை கண்டு பிடித்த ஜேர்மன் மோப்ப நாய் -
Reviewed by Author
on
March 02, 2019
Rating:
No comments:
Post a Comment