வட மாகாணத்தில் விளையாட்டுக்கள் கட்டட தொகுதி கையளிப்பு!
குறித்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து வடமாகாண விளையாட்டு தொகுதிகள் கட்டிடத்தினை இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தர்சினி திறந்து வைத்தார்.
தொடர்ந்து குறித்த கட்டிடத்தொகுதியில் உள்ள நீச்சல் தடாகத்தை அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் தொலைத்தொடர்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, விளையாட்டு அமைச்சு உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த விளையாட்டு மைதானம் வடமாகாண விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு பயன்பெறவுள்ளது. குறித்த கட்டிட தொகுதிக்கான அடிக்கல் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2011ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு நீண்ட வருடங்களின் பின்பு மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்படுகிறது.
வட மாகாணத்தில் விளையாட்டுக்கள் கட்டட தொகுதி கையளிப்பு!
Reviewed by Author
on
March 18, 2019
Rating:

No comments:
Post a Comment