அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் குடிநீர் இணைப்புக்காக நூற்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பம் சமர்பிப்பு-படங்கள்

உலக நீர் தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட வாடிக்கையாளர்களின்
நீர்ப்பட்டியல் மற்றும் நீர் இணைப்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு
உடனடியாகத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதன் நிமிர்த்தம் நேற்று 15/03/2019 அன்று மன்னார் மாவட்ட பொறியியலாளர் அலுவலகத்தில்
முற்பகல் 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை தேசிய நீர் வழங்கல்
சபையினால்  நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.
-இவ் நிகழ்வில் குடிநீர் விடயமான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் மற்றும் அதற்குரிய தீர்வுகளை மிக விரைவாகப் பெற்றுக்கொடுத்தல்.
வாடிக்கையாளரின் நீர்ப்பட்டியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்தல்.
மற்றும் சபையினால் வாடிக்கையாளரின் வசதி கருதி அறிமுகப்படுத்தியுள்ள
புதிய சேவைகள் சம்பந்தமாக அறிவூட்டுதல் போன்ற செயல்பாடுகள் நடைபெற்றன. இவ் சேவையில் குடிநீருக்கான புதிய இணைப்பு தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்டோர் தங்கள் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.

இவ் நிகழ்வில் தேசிய நீர் வடிகால் அமைப்பு சபை வவுனியா பிராந்திய
முகாமையாளர் J.விஐயபாலன், வடக்கு வாணிப அதிகாரி செல்வி
வீ.எல்.சிறிவர்த்தன இவர்களுடன்  மன்னார் தேசிய நீர் வழங்கல் சபை
பொறுப்பதிகாரி D.யசோதரன் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களின் விடயங்களில் கவனம் செலுத்தி அதற்கான தீர்வுகளை வழங்கினர்.

இவ் நிகழ்வின்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனும் கலந்து கொண்டு குடிநீர் விடயத்தில் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளையும் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன்
கலந்துரையாடினார்.





மன்னாரில் குடிநீர் இணைப்புக்காக நூற்றுக்கு மேற்பட்டோர் விண்ணப்பம் சமர்பிப்பு-படங்கள் Reviewed by Author on March 16, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.