அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சியால்-10236 குடும்பங்கள் 37669 நபர்கள் கடுமையாக பாதிப்பு


மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சியால் பத்தாயிரத்து இருநூற்று முப்பத்தாறு குடும்பங்கள்  முப்பத்தேழாயபத்தாயிரத்து  அறுநூற்றி அறு பத்தொன்பது நபர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
கடும் வெப்பத்தின் காரணமாக தீ விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாப்பதற்கு முன்னாயத்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பிரதேச செயலகங்கள் பிரதேச சபைகள் திணைக்களங்களுக்கு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இடாமுகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் கணகரெட்ணம் திலீபன் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட கடும் வெப்பநிலைகாரனமாக மன்னார் மாவட்டத்தில்  இன்று(8)வரை மாந்தை மேற்கு முசலி நானாட்டான் என மூன்று பிரதேச செயலகம் அறுபத்தியிரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளில் பத்தாயிரத்து இருநூற்று முப்பத்தாறு குடும்பங்கள்  முப்பத்தேழாயிரத்து  அறுநூற்றி அறு பத்தொன்பது நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கான குடிநீர் வசதிகளை செய்து கொடுப்பதற்கு பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அத்துடன் மன்னார் பெருநிலப்பரப்புகளாக வயல் நிலங்கள் அதிகம் உள்ள பிரதேசங்களில் தீ விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது அவ்வாறான இடங்களை அடையாளம் கண்டு தண்ணீர் தாங்கிகளில் நீர்களை நிரப்பி வைத்து அனர்த்தங்களை தவிர்த்து கொள்ள முன்னாயத்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு   பிரதேச செயலகங்கள் பிரதேச சபைகள் கமநல தினைக்களங்கள் போன்றவற்றிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த மன்னார் அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் கணகரெட்ணம் திலீபன்  இதில் பாதிக்கப்பட்டோர் தொகையானது சில நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சியால்-10236 குடும்பங்கள் 37669 நபர்கள் கடுமையாக பாதிப்பு Reviewed by Author on April 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.