அண்மைய செய்திகள்

recent
-

மதங்களை மதிக்காவிட்டாலும் மிதிக்காமல் இருப்போம் இந்துசமய பிரதமகுரு தலைவர் ஜெகதீஸ்வர குருக்கள்.

இந்து மக்களாகிய நாம் எல்லோர் மதத்தையும் மதிக்க வேண்டும். நாம் மதித்து
வாழ்கின்றோம். நாம் மற்றைய மதங்களை மதிக்காவிட்டாலும் மற்றைய மதங்களை மிதியாதிருக்க வேண்டும். நாம் சைவ சமயத்திலே மற்றைய மதங்களை மதிக்கின்றோம். அவர்களை மிதியாதிருக்கின்றோம். இதனால்தான் நாவலர் பெருமான் மற்றைய மதங்களை மதித்து பைபிளைக்கூட தமிழில் மொழி பெயர்த்து
வெளியுலகிற்கு கொண்டு வந்தார் என சோதிட ஆலோசகரும், இந்துசமய பிரதமகுரு, , சர்வதேச இந்து மத குருபீடம் புராதன  வாரியப்பர் தலைவருமான கலாநிதி
து.கு.ஜெகதீஸ்வர குருக்கள் இவ்வாறு தெரிவித்தார்.


மன்னாரில் கலாநிதி மனோகரக் குருக்களின் 7வது ஆண்டு நினைவு தினம் கலாநிதி மனோகரக் குருக்களின் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இதன் பொருளாளர் சிவஸ்ரீ வீ.விஜயபாபு குருக்கள் தலைமையில் மன்.சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சோதிட ஆலோசகரும், இந்துசமய பிரதமகுரு, சர்வதேச இந்து மத குருபீடம் புராதன  வாரியப்பர் தலைவருமான கலாநிதி து.கு.ஜெகதீஸ்வர குருக்கள் தொடர்ந்து தனது உரையில்

கலாநிதி மனோகரக் குருக்கள் ஐயாவின் 7வது ஆண்டு நினைவு தினத்தில் நான் இந்த மன்னார் மாவட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஐயா அவர்கள் வாழ்ந்த பொற்காலத்திலே அவரின் செய்திகளை அவரின் செயல் திறன்களை நான் நேரடியாகவும் ஊடகங்கள் ஊடாகவும் அறிந்தபொழுது நான் எனது மனதிலே அவரை பதித்துக் கொண்டவன்.

பல இடங்களிலே அவரின் ஆற்றல் பொதுநல சேவைகளாக சமூகத்துக்கும் சமயத்துக்கும் உகந்ததாக அமைந்திருந்தது. அவருடைய சேவையை நாம் இவ்வளவுதான் என்பதை வரையறுக்க முடியாது.

அவர் மறைந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் இன்றும் நாம் அவரை நினைத்துக்
கொண்டிருக்கின்றோம். இங்கு ஒரு சிறுமி தனது கவிதையிலே ஐயாவின் ஆற்றல் செயல்பாடுகள் போன்ற அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி தெரிவித்ததை நாம் கேட்டோம்.

நாம் அறியாத விடயங்கள்கூட இவரின் கவிதையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இவர் ஒரு சிறந்த சிவாச்சாரியார். இவர் தனியொரு சிவாச்சாரியார் மற்றும் ஆலய பணிகளோடு நில்லாது சமய சமூகப் பணிகள் ஏராளம் செய்திருக்கின்றார்கள்.

இவர் சிவாச்சாரியார்களுக்கும் சமய பெரியார்களுக்கும் இந்து சமயத்தை வழி
நடத்துபவர்களுக்கும் ஒரு முன்னுதாரமாகத் திகழ்ந்தார். ஏழு ஆண்டுகள் அல்ல நூறு ஆண்டுகள் சென்றாலும் இவரின் நினைவுகள் மன்னார் இந்து மக்களால் தொடரும் சாத்தியம் உண்டு.

இன்று நாம் பல வழிகளிலே செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். எமது கலாச்சார விழுமியங்களை பேண வேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்து கலாச்சாரத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இங்கு வந்துச் செல்லும் இந்து பெரியவர்கள் சொல்லுவார்கள் யாழ்ப்பாணத்தை  போல் அல்ல மன்னாரில் வாழுகின்ற இந்து மக்கள் சைவத்தை வளர்ப்பதற்காக இயன்றளவு தங்களாலே செய்யக்கூடிய பணிகளை ஊக்கமாக செய்கின்றார்கள் என்று.

நீங்கள் இங்கு செய்கின்ற பணிகளை நாங்கள் யாழ்ப்பாணத்திலும் காண முடியாது. பல இடர்பாடுகளிலும் பல இன மக்களுக்கிடையே உங்கள் பணிகளை செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

இதுபற்றி நல்லாதின முதல்வர்கூட எனக்கு பல தடவைகள் கூறியிருக்கின்றார்கள். நானும் இவற்றை அறிவேன். நாம் இப்பொழுது நாவலர் சிலைக்கு முன்னதாக nஅமர்ந்திருக்கின்றோம்.
நாவலர் பெருமான் சைவத்தின் பாதுகாவலராக இருக்கின்றார். நான் இங்கு
இருக்கும் மக்களுக்கு நினைவூட்டவும் வலியுறுத்த வேண்டியவனாகவும்
இருக்கின்றேன்.

ஒவ்வொருவருக்கும் ஒரு தாய் இருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு மொழி இருக்கின்றது. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒரு மதம் இருக்கின்றது.

நாம் எமது தாய்க்குப் பதிலாக வேறொரு தாயைக் காட்டி இதுதான் எனது அம்மா என்று சொல்ல முடியாது. தனக்குரிய தாய்தான் தாய். ஆதை மாற்ற முடியாது. நாம் தமிழர்கள். நாம் சிங்களம் பேசினால் நாம் சிங்களவர் என கூற முடியாது.

தாயை, மொழியை மாற்ற முடியாததுபோல நாம் சைவ சமயத்திலிருந்து வேறு சமயத்துக்கு மாற முடியாது. இது எம்மில் ஒவ்வொருவரின் மனதிலும் பதிய வேண்டியதொன்றாகும்.

ஆகவே எம்மிலிருந்து மதம் மாறி செல்லுபவர்களை நாம் அவர்களை விலத்தி வைக்க வேண்டியவர்கள. எமது சைவ மத அடிப்படை கோட்பாட்டிலே நான் எல்லா இடங்களிலும் சொல்லவது நாம் ஒவ்வொருவரையும் மதிக்க வேண்டும். பெற்றோரை மதிக்க வேண்டும். எங்களது மதத்தை மேலாக மதிக்க வேண்டும். அத்துடன் எல்லோரின் மதத்தையும் மதிக்க வேண்டும். நாம் மதித்து வாழ்கின்றோம்.

நாம் மற்றைய மதங்களை மதிக்காவிட்டாலும் மற்றைய மதங்களை மிதியாதிருக்க வேண்டும். நாம் சைவ சமயத்திலே மற்றைய மதங்களை மதிக்கின்றோம். அவர்களை மிதியாதிருக்கின்றோம்.

இதனால்தான் நாவலர் பெருமான் மற்றைய மதங்களை மதித்து பைபிளைக்கூட தமிழில் மொழி பெயர்த்து வெளியுலகிற்கு கொண்டு வந்தார்.

திருக்கேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்து இந்து சமய குருமார் பேரவையின் தலைவர் என்ற வகையில் நான் முதலில் கண்ட அறிக்கைவிட எனக்கு பேறு கிடைக்கப் பெற்றது. இதை கொடுக்க வேண்டிய தேவையும் இருந்தது.

இதைத் தொடர்ந்து பலர் குரல் கொடுத்தார்கள் இதன் நடைமுறை தற்பொழுது
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த வளைவு தகர்த்ப்படுகின்றபோது எதை மிதிக்கக்கூடாதோ அதாவது சைவ சமய சின்னமானது மிதிக்கப்பட்டபோது பலருக்கும்
வேதனை அளித்தது.

இன்று எனக்கு ஒரு மகிழ்வை தருகின்றது. அதாவது அன்றைய நிகழ்வுக்குப் பின் நான் சிவச்சாரியார் என்ற வகையிலோ அல்லது இந்துசமய பிரதமகுரு என்றோ மனோகரக்குருக்களின் புண்ணியத்தால் இன்று இவ் நிகழ்வில் மன்னாரில் நந்திக் கொடியை  ஏற்றி வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.

எதிர்காலத்தில் நந்திக் கொடி பறக்கும். சைவம் தலைத்தோங்கும், இந்துக்கள்
நிறைவாக வாழ்வார்கள். இன்று எமது நாட்டில் மட்டுமல்ல பல இடங்களில்
பிரச்சனைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

வவுனியாவிலும் சமய பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எங்கும்
நீங்கள் குரல் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள்.

கீரிமலையை புனித பிரதேசமாக ஆக்க வேண்டும் என தெரிவித்திருந்தேன். கீரிமலை சிவன் ஆலயத்திலிருந்து காங்கேசன்துறை கடற்கரை வீதியிலே 30, 40 வருடங்களுக்கு முன்னதாக நாங்கள் பார்த்த தரிசித்த ஆலயங்கள் இருக்கின்றன.

மிகப் பெரிய கண்ணன் கோவில் இருக்கின்றது. கடந்த 40 வருடங்களாக நாங்கள் உட்செல்ல முடியாத காரணத்தினால் எங்களால் பார்க்க முடியவில்லை. அங்கு சித்தருடைய சமாதி இருக்கின்றது. கடற்கரையிலே குகைகள் இருக்கின்றது. இலங்கையிலே முதன்முதலாக கதாப்பிரசங்கத்தை இந்தியா இலங்கை என்ற மரபை கொண்டு வந்த சங்கர சுப்பையன் சமாதி இருக்கின்றது.

அப்பகுதியில் இந்து ஆலயங்களும் சைவ மக்களின் காணிகளும் இருந்தும்
சுற்றுல்லா துறை போர்வையில் இவைகள் இன்று சுவீகரிக்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் சைவ மக்கள் ஒருமித்த குரல் எழுப்பி சைவம் எங்கும் நிலை கொள்ள செயல்பட வேண்டும்.

எங்கெங்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது ஒரு சூடத்தையாவது வைத்து நாம்
வழிபடுகின்றபொழுது ஆன்மீகமாக வழிபடாதபோதும் பக்தி மார்க்கமாக
வழிபடுகின்றவேளையில் அந்த பிரதேசம் சிவ பூமியாக இந்து நிலமாக சைவ நிலமாக பேணப்படும்.

வைரவரின் சூடத்தை நாம் வைக்கின்றபோது மற்றவர்கள் தன்பாட்டிலே ஒதுங்கிக் கொள்வார்கள். ஆகவே அனைவரும் சைவத்தை காக்க வேண்டும். சைவ விழுமியங்களை பேண வேண்டும். எதிர்காலத்தில் சிறுவர் இளைஞர்கள் எல்லோரும் சைவத்தை அறியக்கூடிய வகையில் இருக்கினற் சைவ நிறுவனங்கள், இந்து நிறுவனங்கள், குருமார் ஒன்றியங்கள் பரிபால சபையினர், அறநெறி பாடசாலைகள் அனைத்தும் ஒருங்கினைந்து சைவத்தை பரப்புவதிலும் வளர்ப்பதிலும் பாடுபட வேண்டும்.

மனோகரக் குருக்கள் ஐயா  பல வருடங்களுக்கு முன்பாக யாரும் செய்ய முடியாத முயற்சியை தனி மனிதனாக இருந்து செயல்பட்டதை தொடரும்போது எமது இந்து மதம் பேணப்படும். யாழ்ப்பாணத்தில் நெறி தவறி செல்லுகின்ற எமது இளைஞர்களுக்கு இவைகள் நல்வழிப்படுத்த வழி சமைக்கப்படும் என இவ்வாறு தெரிவித்தார்.











மதங்களை மதிக்காவிட்டாலும் மிதிக்காமல் இருப்போம் இந்துசமய பிரதமகுரு தலைவர் ஜெகதீஸ்வர குருக்கள். Reviewed by Author on April 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.