கலாநிதி மனோகரக் குருக்களின் நினைவு-பேசாலை இந்து முன்னனி அறநெறி பாடசாலை மாணவிகள் 1ம் இடம்.
கலாநிதி மனோகரக் குருக்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மன்னார்
பகுதியிலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற வினாடிவினா காண்பியப் போட்டியில் பேசாலை இந்து முன்னனி அறநெறி பாடசாலை மாணவிகள் முதல் இடத்தை தட்டிக் கொண்டனர்.
மன்னாரில் கலாநிதி மனோகரக் குருக்களின் 7வது ஆண்டு நினைவு தினம் கலாநிதி மனோகரக் குருக்களின் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இதன் பொருளாளர் சிவஸ்ரீ வீ.விஐயபாபு குருக்கள் தலைமையில் மன்.சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (07.04.2019) நடைபெற்றது.
இவ் தினத்தை முன்னிட்டு கல்வி சம்பந்தமான போட்டிகள் சில ஏற்கனவே அறநெறி பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடைபெற்று முடிந்திருந்தபோதும் இவ் தினத்தன்று இறுதி போட்டியாக மன்னார் கீரி ஸ்ரீ முருகன் அறநெறி பாடசாலை மாணவிகளுக்கும் பேசாலை இந்து முன்னனி அறநெறி பாடசாலை மாணவிகளும் இடையே வினாடிவினா காண்பியப் போட்டி இடம்பெற்றது.
இவ் போட்டியில் பேசாலை இந்து முன்னனி அறநெறி பாடசாலை மாணவிகள் 49 புள்ளிகளும், மன்னார் கீரி ஸ்ரீ முருகன் அறநெறி பாடசாலை மாணவிகள் 36
புள்ளிகளும் பெற்றதில் பேசாலை இந்து முன்னனி அறநெறி பாடசாலை மாணவிகள் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் மன்னார் கீரி ஸ்ரீ முருகன் அறநெறி பாடசாலை மாணவிகளை தோற்கடித்தனர்.
கடந்த மூன்று வருடங்களாக கலாநிதி மனோகரக் குருக்களின் நினைவுப் தினத்தை முன்னிட்டு நடைபெற்று வந்த வினாடிவினா காண்பியப் போட்டிகளில் மன்னார் கீரி ஸ்ரீ முருகன் அறநெறி பாடசாலை மாணவிகள் முதல் இடங்களை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
கலாநிதி மனோகரக் குருக்களின் நினைவு-பேசாலை இந்து முன்னனி அறநெறி பாடசாலை மாணவிகள் 1ம் இடம்.
Reviewed by Author
on
April 10, 2019
Rating:
No comments:
Post a Comment