ஆசிய சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்று அசத்திய தமிழன்! உற்சாக வரவேற்பு -
சமீபத்தில் ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலுதூக்கும் போட்டியில், சென்னையைச் சேர்ந்த நவீன் என்ற வீரர் கலந்துகொண்டார். அந்தப் போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்றதுடன், ஒரு வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.
17 வயதாகும் நவீன் சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ஆவார். அவரது தந்தை சைக்கிள் கடை நடத்தி வருகிறார். வீட்டில் போதிய வசதி இல்லாத நிலையிலும், தனது கடினமான பயிற்சியின் மூலம் தங்கப்பதக்கம் வென்று சாதித்துக் காட்டியிருக்கிறார் நவீன்.
இதுகுறித்து நவீனின் தந்தை சம்பத் கூறுகையில், எனக்கும் விளையாட்டுத் துறையில் சாதிக்க சிறுவயதில் ஆர்வமும் இருந்தது. அப்போது குடும்பச் சூழல் அதனை தடுத்தது. இப்போது என் மகன் முன்னேறிக் கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பதக்கம் வென்ற நவீன் கூறுகையில், ‘நான் தங்கம் வென்றபோது இந்தியாவின் தேசிய கீதம் ஒலித்தது. அப்போது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளேன்.
கண்டிப்பாக காமன்வெல்த் போட்டியிலும் பதக்கம் வெல்வேன். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்கு தமிழக அரசும் உதவ வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
நவீன், ஸ்குவாட் பிரிவில் 250 கிலோவை தூக்கி தங்கமும், பெஞ்ச் பிரஸ் பிரிவில் 135 கிலோவை தூக்கி வெண்கலப்பதக்கமும், டெட் லிப்ட் பிரிவில் 235 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதுதவிர ஒட்டுமொத்த பிரிவிலும் அவர் தங்கம் வென்றிருக்கிறார்.
ஆசிய சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்று அசத்திய தமிழன்! உற்சாக வரவேற்பு -
Reviewed by Author
on
April 29, 2019
Rating:

No comments:
Post a Comment