அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸ் பனிச்சரிவில் சிக்கி 4 ஜேர்மனியர்கள் பலி! -


சுவிட்சர்லாந்தின் Bernese Alps மலையில் ஜேர்மனியைச் சேர்ந்த 4 மலையேற்ற வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர்.

ஜேர்மனியைச் சேர்ந்த 4 மலையேற்ற வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை சுவிஸில் உள்ள Bernese Alps மலையை கடக்க முயன்றுள்ளனர்.
ஆனால், அவர்கள் திட்டமிட்ட நேரத்திற்குள் இலக்கை அடையவில்லை. இதனைத் தொடர்ந்து, அவசர சேவைகள் மூலம் கண்காணிக்கப்பட்டபோது குறித்த நான்கு வீரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
சனிக்கிழமையன்று அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டது. சுமார் 10,200 அடி உயரத்தில் உள்ள Bernese Alps மலையின் Greenhorn இடைவெளியை அவர்கள் கடக்க முயன்றபோது பனிச்சரிவில் சிக்கி இறந்ததாக தெரிய வந்தது.
சிறப்பு தேடல் கருவி ஒன்றின் உதவியுடன் குறித்த ஜேர்மனியர்களின் உடல்கள் பனியில் கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவர்கள் விவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் பனிச்சரிவில் சிக்கி கிட்டத்தட்ட 20 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் பனிச்சரிவில் சிக்கி 4 ஜேர்மனியர்கள் பலி! - Reviewed by Author on April 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.