உலக வங்கியின் 483 மில்லியன் ரூபா நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டம்! -
கேகாலை மாவட்டம் புலத்கொகுபிடிய ஒருங்கிணைந்த கிராமிய குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
உலக வங்கியின் 483 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் 2000 பேர் பயனடையவுள்ளனர்.
இதேவேளை, இத்திட்டம் அடுத்த வருடத்திற்கு முன்னர் மக்களின் பாவனைக்கு திறக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியின் 483 மில்லியன் ரூபா நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டம்! -
Reviewed by Author
on
April 01, 2019
Rating:

No comments:
Post a Comment