இந்த 7 வகையான உலக தண்ணீர் பற்றி தெரியுமா? பேராபத்தில் இருந்து தப்பிக்க இதுதான் வழி! -
தற்போதைய நிலையில் நீரின் அளவு குறைந்து வருவது ஒரு புறம் இருக்க, அவற்றின் தன்மை மிகவும் மோசமான அளவில் பாதிக்கப்படுவது இன்னொரு புறத்தில் உள்ளது. குடிக்கும் நீரில் இருந்து பல்வேறு விதமான நோய்கள் பரவுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
இந்த வகையான நோய்கள் நமது உடல் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும். இதுவரை நமக்கு தெரிந்தது எல்லாம் வெறும் குடிக்கும் நீர் மற்றும் சாதாரண பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நீர் என்பவை தான். ஆனால், இந்த நீரிலே 7 வகை உண்டாம். இவை ஒவ்வொன்றிருக்கும் ஒரு தன்மையும் உண்டு.
நீர் ஆதாரம்
நமது உடலானது 70 சதவீதம் நீரை ஆதாரமாக கொண்டது. உடலில் தண்ணீரின் முக்கிய பயன்பாடு, கணைய பகுதியில் இருந்து கிருமிகளை வெளியேற்றுதல், செரிமானத்திற்கு உதவுதல், செல்களுக்கு ஆக்சிஜனை அனுப்புதல், ஊட்டச்சத்துக்களை எல்லா உறுப்புகளுக்கும் கொண்டு போகுதல், மலச்சிக்கலை தடுத்தல் போன்ற வேலைகள் தான். இது போன்ற வேலைகள் நீர் இல்லையேல் நடைபெறாது.வாயுக்கள் கொண்ட நீர்
இதை ஆங்கிலத்தில் Sparkling water என்று கூறுவார்கள். இது கிட்டத்தட்ட மினெரல் சேர்க்கப்பட்ட நீர் வகையை சேர்ந்தது தான். பொதுவாகவே இவை அதிக அளவில் செயற்கை வகையில் கார்போனேட்டட் செய்யப்பட்டிருக்கும். ஆதலால் இது அந்த அளவிற்கு உடலுக்கு நல்லது கிடையாது. எனினும், இவற்றில் சர்க்கரை சேர்க்காமல் இருந்தால் இதுவும் ஆரோக்கியம் கொண்டவை தான்.ஆர்.ஓ நீர்
ரிவேர்ஸ் ஆஸ்மாசிஸ் என்கிற முறையை வைத்து நீரை சுத்திகரிப்பதால் இந்த வகையான பெயர் இதற்கு வந்தது. இந்த நீரானது நுண் கிருமிகளை முற்றிலுமாக நீக்கி விடும். ஆனால், இவை பாக்டீரியா போன்ற கிருமிகளை மட்டும் தான் நீக்கும். பல நேரங்களில் வைரஸ் போன்றவற்றை இதன் துளைகளில் நீக்க இயலாமல் போய் விட கூடும்.டீடாக்ஸ் நீர்
உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற தண்ணீர் வகை இது தான். பழங்கள், காய்கறிகள், மேலும் பல மூலிகைகளை ஒரு கண்ணாடி ஜாரில் சேர்த்து அதில் நீரை ஊற்றி விட வேண்டும். இந்த நீரை குடித்து வந்தால் உடல் சுத்தம் பெறுவதோடு, உடல் எடையும் குறைந்து விடுமாம்.மினெரல் சேர்த்த நீர்
இந்த Mineral water பற்றி அறிந்திராதவர் யவரும் இருக்க மாட்டார்கள். இது முழுக்க முழுக்க தாதுக்கள் சேர்க்கப்பட்ட நீராகும். முதலில் நீரை சுத்தம் செய்து விட்டு அதன் பின்னர் இதில் தாதுக்களை சேர்த்து விடுவர். ஆதலால், இது ஆரோக்கியம் நிறைந்த நீராகவே உள்ளது.வடிகட்டப்பட்ட நீர்
99.9% சுத்தமான நீர் என்றால் அது இந்த வகை Distilled Water தான். இவை வடிகட்டப்பட்ட நீராக இருப்பதால் முழு கிருமிகளையும் அகற்றி விடுமாம். அதாவது முதலில் நீரை ஆவியாக்கி அதனை வடிகட்டி குடிக்கும் முறை தான் இந்த நீர். ஆனால், இதில் ஆரோக்கியம் தர கூடிய தாதுக்கள் தான் இருக்காது.டானிக் நீர்
நம் எல்லோருக்கும் டானிக் என்றால் என்னவென்று தெரியும். ஆனால், டானிக் நீர் என்னவென்று தெரியுமா? உண்மையில் இப்படி கூட நீர் வகை உள்ளது என்பது தான் ஆச்சரியமான ஒன்று. இவற்றில் quinine என்கிற மூல பொருள் சேர்ப்பதால் இவை லேசாக கசப்பு தன்மை தர கூடும். இவை காக்டெய்ல் போன்றவற்றோடு சேர்த்து குடிப்பார்கள்.சுவைமிக்க நீர்
இந்த வகை நீரை நாம் வீட்டிலே தயாரிக்கலாம். அதாவது சிறிது பழங்கள், மூலிகைகள், ஆகியவற்றை நறுக்கி நீரில் கலந்து வைத்து கொண்டு அதனை குடித்து வந்தால் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும். அத்துடன் இதன் சுவையும் அதிகரிக்கும்.எச்சரிக்கை!
எந்த வகையான நீரை தயாரிப்பதாக இருந்தாலும் முதலில் நமக்கு மூல பொருளாக இருப்பது சாதாரண வகையில் பூமியில் கிடைக்கும் தண்ணீர் தான். நீர் ஆதாரம் இல்லையென்றால் நம்மால் உயிர் வாழ இயலாது. எனவே, நீரை வீணாக்காமல் பயன்படுத்தி வந்தால் எதிர் கால சந்ததியினரை பேராபத்தில் இருந்து காக்கலாம்.
இந்த 7 வகையான உலக தண்ணீர் பற்றி தெரியுமா? பேராபத்தில் இருந்து தப்பிக்க இதுதான் வழி! -
Reviewed by Author
on
April 28, 2019
Rating:

No comments:
Post a Comment