ஆலயங்களின் குண்டு வெடிப்பால் மன்னார் மறைமாவட்டம் சோகம் நிறைந்து காணப்படுகின்றது-ஆலயங்களில் இராணுவம் பாதுகாப்பில் காணப்படுகின்றனர்.
கத்தோலிக்க மக்களால் கொண்டாடப்படும் கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவின்
விஷேட வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல்களால் பலர் கொல்லப்பட்டும், காயப்பட்டதையும் தொடர்ந்து மன்னார் மறைமாவட்டம் மிக சோகத்தில் ஆழ்ந்துள்ளதுடன் கத்தோலிக்க ஆலயங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அகில உலகம் முழுதும் கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ மக்களால்
கொண்டாடப்படும் கிறிஸ்து உயிர்ப்பு விழாவினது விஷேட வழிபாடுகள்
ஞாயிற்றுக் கிழமை (21.04.2019) காலை நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது
கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு கத்தோலிக்க ஆலயங்களில்
ஏற்பட்ட குண்டு வெடிப்பால் அதிகமான பக்தர்கள் இறந்தும் காயங்களுக்கு
உள்ளாகியதைத் தொடர்ந்து மன்னார் மறைமாவட்டம் மிகவும் சோகம் நிறைந்து காணப்படுகின்றது
.
நாற்பது தினங்களாக கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து கத்தோலிக்க
மக்கள் பெரும்பாலானோர் செபம், தவம், ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஞாயிறு தினத்தின் அன்று கிறிஸ்துவின் உயர்ப்பு விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வரும் இவ்வேளையில் ஞாயிறு (21.04.2019) காலை வழிபாடுகளின்போது ஆலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பால் பலர் இறந்தும் காயப்பட்டும் காணப்பட்டுள்ளதால் மன்னார் மறைமாவட்டம் மகிழ்வு பொழிவுழந்து மிக சோகத்துடன் காணப்படுகின்றது.
அடிக்கடி மன்னார் மறைமாவட்த்திலுள்ள ஆலயங்களில் சோக மணி
ஒலிக்கப்படுவதுடன் ஒலி பெருக்கின் மூலம் இவ் துன்ப நிகழ்வை முன்னிட்டு
செபிப்பதையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அத்துடன் அனைத்து பங்கு
மக்களும் தங்கள் ஆடம்பர நிகழ்வுகளை தவிர்த்து பாதிப்பு அடைந்த
மக்களுக்காக செபிக்கும்படியும் வேண்டப்பட்டும் வருகின்றனர்.
முக்கிய பங்கு தளங்களில் சோக இசையும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
அத்துடன் ஆலயங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொளளும்படியும்
மன்னார் ஆயர் இல்லத்தினால் பங்கு தந்தையருக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார் தெரிவித்தார்.
தற்பொழுது மன்னார் மறைமாவட்டத்திலுள்ள ஆலயங்களில் இராணுவ பாதுகாப்பும் இடப்பட்டுள்ளதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஆலயங்களின் குண்டு வெடிப்பால் மன்னார் மறைமாவட்டம் சோகம் நிறைந்து காணப்படுகின்றது-ஆலயங்களில் இராணுவம் பாதுகாப்பில் காணப்படுகின்றனர்.
Reviewed by Author
on
April 21, 2019
Rating:
No comments:
Post a Comment