தனித்து விடப்பட்ட நிலையில் வசிக்கும் முன்னாள் போராளிகள் -
வீடு, தண்ணி, மலசலகூடம் என எந்தவிதமான அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை தனித்து விடப்பட்ட நிலையில் வசிக்கும் புதுக்குடியிருப்பு கைவேலியில் வசிக்கும் இளம் குடும்பம். உடல் முழுவதும் காயம், தலையில் குண்டுகளின் சன்னங்கள், குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை, மேசன் வேலை தெரிந்தும் வெய்யில் நின்று உழைக்க முடியாத சூழல்.
சில நேரங்களில் என்ன செய்கிறேன் என தெரியவில்லை என்கிறார் ஈழ விடுதலைக்குப் போராடிய குடும்பத்தின் தலைவர். எல்லோருக்கும் கிடைக்கும் வீட்டுத்திட்டம் கூட கிடைக்கவில்லை. உங்களிடம் கேட்பது நாங்கள் சுயமாக உழைக்க கூடிய சூழல் ஒன்றை ஏற்படுத்தி தாருங்கள் என கண்ணீர் விடும் இந்தக் குடும்பம்.
இவர்களது வாழ்க்கையை வெளிக்காட்டியுள்ளது ஐபிசி தமிழின் என் இனமே என் சனமே நிகழ்ச்சி. நீங்களே பாருங்கள்....
தனித்து விடப்பட்ட நிலையில் வசிக்கும் முன்னாள் போராளிகள் -
Reviewed by Author
on
April 01, 2019
Rating:

No comments:
Post a Comment