இரு கைகள், ஒரு கால் இல்லை - பரீட்சையில் சாதனைப்படைத்த மாணவி! தமிழ் பாடத்திலும் சித்தி -
ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற இந்த மாணவி, 8 ஏ திறமை சித்திகளையும் ஒரு பீ சித்தியையும் பெற்றுள்ளார். தமிழ் மொழியில் பீ சித்தியை பெற்றுள்ளமை இங்கு சிறப்பம்சம்.
இந்த மாணவி பிறப்பிலேயே அங்கவீனமானவர். இரண்டு கைகள் மட்டுமல்ல. ஒரு காலும் இல்லை.
எனினும் கடந்த முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 5 லட்சத்து 56 ஆயிரத்து 984 மாணவ, மாணவிகளில் எழுதுவதற்கு கைகள் இல்லாதது மட்டுமல்ல, நடக்க இரண்டு கால்கள் இல்லாத நிலையில், பரீட்சையில் சித்தியடைந்திருப்பது ஏனைய மாணவ, மாணவிகளை விட முக்கியத்துவம் பெறுகிறார்.
இந்த மாணவி எகலியகொட பிரதேசத்தில் தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறார். இவரது வீடு அவிசாவளை மோதல ஜனசலு மாவத்தையில் இருக்கின்றது.
தனது மகள் பற்றி தந்தை சரத் குணவர்தன கூறுகையில்,
எங்களது ஊர் தெஹிஹோவிட்ட,தெல்ஒலுவ, எனது மகள் பிறப்பிலேயே அங்கவீனமானவள் பிறக்கும் போதே இரண்டு கைகளும் ஒரு காலும் இருக்கவில்லை. நான் ஒரு ஆசிரியர், மனைவி சங்கீத ஆசிரியை. எனது மகள் சிறுவதில் இருந்தே இசையை பிரியமாக நேசித்தாள்.
எனது மகள் இரண்டு கைகள் மற்றும் ஒரு கால் இல்லாத நிலையில், தனக்கிருக்கும் ஒரு காலில் பாடசாலையில் அனைத்தையும் செய்வாள்.
மகளுக்கு மூன்று வயது இருக்கும் போது, ஒரு ஆசிரியை வீட்டுக்கு வந்து ஒரு காலில் எழுதவும் செயற்படவும் கற்றுக்கொடுத்தார். கீழே அமர்ந்து கால் விரல்களில் காதிதங்களை கிழிக்கவும் மடிக்கவும் கற்றுக்கொடுத்தார்.
இதன் பின்னர், பேனை, பென்சிலை பயன்படுத்தி எழுத கற்றுக்கொடுத்தார். நானும் ஆசிரியர் என்பதால், என்னாலும் மகளுக்கு உதவ முடிந்தது. சிறிது காலத்திற்கு பின்னர் மகளுக்கு செயற்கை கால் ஒன்றை வாங்கி பொருத்தினோம்.
அவர் நடக்க பழகிக்கொண்டார். இதன் பின்னர் மகளின் விருப்பு வெறுப்புகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நன்றாக எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். படிக்கவும் ஏனையவற்றை கற்றுக்கொள்ளவும் பழகிக்கொண்டார்.
முதலில் தெஹிஓவிட்ட தெல்ஒலுவ கனிஷ்ட பாடசாலையில் சேர்த்தோம். 2012 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எழுதினாள். 153 புள்ளிகளை பெற்றதை அடுத்து எகலியகொட தேசிய பாடசாலையில் சேர்த்தோம்.
மகளுக்கு இரண்டு கைகள் இல்லா விட்டாலும் செயற்கை காலை பொருத்திய பின்னர், பெரிய உற்சாகம் கிடைத்தது. தனியே நடந்து செல்ல முடிந்தது.
நாங்கள் இருவரும் ஆசிரியர்கள் மட்டுமல்ல, எங்கள் மகள் படிக்கும் பாடசாலையில் பணியாற்ற கிடைத்தமை பெரிய வாய்பாக அமைந்தது.
பாடசாலை அதிபர் மட்டுமல்ல ஆசிரியர்கள், வகுப்பு தோழர்கள் உட்பட அனைவரும் உதவினர் என மாணவியின் தந்தை பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற இந்த மாணவி படிப்பதில் மட்டும் திறமைசாலியல்ல, இசையிலும் திறமைசாலி, பாடுகிறார். இசை நிகழ்ச்சிகளையும் நடக்கிறார்.
இரு கைகள், ஒரு கால் இல்லை - பரீட்சையில் சாதனைப்படைத்த மாணவி! தமிழ் பாடத்திலும் சித்தி -
Reviewed by Author
on
April 01, 2019
Rating:

No comments:
Post a Comment