ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் திறக்கப்படாது: பேராயர் மால்கம் ரஞ்சித் அறிவிப்பு! -
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தற்போது வரை 253 அப்பாவி பொதுமக்கள் பலியாகியிருப்பதுடன், பலரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலை அடுத்து பொதுமக்கள் யாரும் வெளியில் அதிகம் நடமாட வேண்டாம் என அரசு கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், இன்னும் சில இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால் வழிபாட்டு தளங்களில் யாரும் கூட வேண்டாம் என எச்சரிக்கை செய்திருந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்திருக்கும் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித், வரும் ஞாயிற்றுக்கிழமையன்று எந்த ஆலயமும் திறக்கப்படாது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக வீட்டிலேயே தங்கியிருங்கள்.
மறுபடியும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் திறக்கப்படாது: பேராயர் மால்கம் ரஞ்சித் அறிவிப்பு! -
Reviewed by Author
on
April 27, 2019
Rating:
No comments:
Post a Comment