கல்முனையில் தொடரும் பதற்றம்! 15 சடலங்கள் மீட்பு - 5 தற்கொலை குண்டுதாரிகள் -
அம்பாறை - கல்முனை பகுதியில் நேற்று ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பாரிய மோதல் நிலை ஏற்பட்டது.
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் ஏற்பட்டது.
அதிரடி படையினரின் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க முடியாத பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டனர்.
தற்போது அந்தப் பகுதி முழுமையாக அதிரடி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்போது சாய்ந்தமருந்து பகுதியில் மொத்தமாக 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 சிறுவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருந்து பகுதியிலுள்ள வீடு ஒன்றில் தற்கொலை தாக்குல் மேற்கொண்டமையினால் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 5 ஐ.எஸ் பயங்கரவாதிகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கல்முனையில் தொடரும் பதற்றம்! 15 சடலங்கள் மீட்பு - 5 தற்கொலை குண்டுதாரிகள் -
Reviewed by Author
on
April 27, 2019
Rating:

No comments:
Post a Comment