அண்மைய செய்திகள்

recent
-

Brexit: ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் இந்த வாரம் நிறைவேறுமா? -


ஒப்பந்தங்களற்ற ஒரு பிரெக்சிட் இந்த வாரம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரித்தானிய பிரதமர் தெரஸா மே ஜூன் 30 வரை பிரெக்சிட்டை தாமத்தப்படுத்த கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஆனால் Donald Tuskஓ 2020 மார்ச் 29 வரையிலான தாமதம் குறித்த யோசனையை முன் வைத்திருந்தார்.
இதற்கிடையில் பிரித்தானிய கட்சிகளுக்கிடையில் தொடர்ந்து ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சு வார்த்தைகள் இன்னும் தொடர இருக்கின்றன.

ஐரோப்பிய கமிஷனின் தலைவரான Jean-Claude Junckerஇன் கூற்றுப்படி இந்த வாரம் வெள்ளிக்கிழமை, அதாவது 12 ஆம் திகதி ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் நிறைவேற்றப்பட வேண்டியது.
இதற்கிடையில், நாளை பிரஸ்ஸல்ஸில் நடக்க இருக்கும் உச்சி மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் கூடி பிரெக்சிட் தாமதம் குறித்து முடிவெடுப்பார்கள்.

ஆனால் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி பிரெக்சிட் நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரித்தானிய பிரதமர் தெரஸா மே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானையும், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலையும் சந்தித்து பிரெக்சிட் நீட்டிப்பு குறித்து பேசுவதற்காக பயணம் புறப்படுகிறார்.
தொடர்ந்து அவர் மற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.




Brexit: ஒப்பந்தங்களற்ற பிரெக்சிட் இந்த வாரம் நிறைவேறுமா? - Reviewed by Author on April 09, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.