மன்னாரில் முப்படையினரின் பாதுகாப்பு-தொடர் சோதனைகள்-படங்கள்
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு அன்று இடம் பெற்ற தொடர் தற்கொலைக் குண்டு தாக்குதல்களை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் முப்படையினரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப் பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள காத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் முஸ்ஸீம் பள்ளிவாசல்களுக்கு படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வழிபாடுகளுக்குச் செல்பவர்கள் சோதனைகளுக்கு பின்னர் காத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் முஸ்ஸீம் பள்ளிவாசல்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் முன் பகுதியில் உள்ள இரு நுழைவாயில்களில் ஒன்று தற்காலிகமாக முழுமையாக மூடப்பட்டுள்ளதோடு,ஒரு நுழைவாயிலினுடாக மக்கள் சோதனைகளின் பின்னர் வைத்தியசாலைக்குள் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர்.
இது இவ்வாறு இருக்க மன்னார் பிரதான பாலத்தடியில் முப்படையினரும் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேறு இடங்களில் இருந்து மன்னாரிற்கு வருகின்ற அனைத்து வாகனங்களும் கடும் சோதனைகளுக்கு உற்படுத்தப்படுவதோடு, மன்னாரில் இருந்து வெளியில் செல்லும் சகல விதமான வாகனங்களும் சோதனைகளுக்கு உற்படுத்தப்படுவதோடு, அடையாள அட்டை மற்றும் ஆவணங்களும் சோதனைக்கு உற்படுத்தப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முஸ்ஸீம் கிராமங்கள் படையினரினால் கடும் சேதனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றது.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கருசல், தாராபுரம், காட்டுப்பள்ளி, மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்கள் படையினரினால் தொடர் சோதனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றது.
சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரனைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
April 28, 2019
Rating:

No comments:
Post a Comment