தேடப்பட்டு வந்த ஐஎஸ் அமைப்பின் பெண் தீவிரவாதி கைது -
குறித்த பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மாவெனெல்ல - மாரவில பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளினால் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்னர். 500 பேர் வரையில் படுகாயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சந்தேகிக்கப்படும் சிலரின் புகைப்படங்களை வெளியிட்டிருந்த பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியிருந்தனர்.
மொஹமட் இவுஹய்ம் சாதிக் அப்துல்ஹக், பாத்திமா லதீபா, மொஹமட் இவுஹய்ம் ஷாஹிட் அப்துல்ஹக், புலஸ்தினி ராஜேந்திரன் எனப்படும் சாரா, அப்துல் காமர் பாத்திமா காதியா, மொஹமட் காசிம் மொஹமட் ரில்வான் ஆகிய நபர்களே பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களாகும்,
இந்நிலையிலேயே, பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பாத்திமா லதீபா என்ற பெண் மாவெனெல்ல - மாரவில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடப்பட்டு வந்த ஐஎஸ் அமைப்பின் பெண் தீவிரவாதி கைது -
Reviewed by Author
on
April 28, 2019
Rating:

No comments:
Post a Comment